பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அறிஞர்கள் பதினைவர் எழுதிய பாடல்களை மட்டும் இவண் தருகிறேன். கீழே, முதலில் அறிஞர் பெயரும் அவர் அனுப்பியுள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கையும் இருக்கும். அதன் கீழே, மாதிரிக்காக ஒவ்வொருவரின் ஒவ்வொரு பாடல் மட்டும் இடம் பெறும். இனி அவை வருமாறு:1. நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் - 3 - கரந்தைக் கல்லூரி - முதல்வர் - (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 'எழுமுகிலும் ஒன்றாகி அமிழ்தமழை பொழிவதென எவரும் போற்றும் பழுதறுநின் சொல்மழையால் உளங்குளிர்ந்தே உயிர் குழைந்த படியே மெல்லாம் அழுதழுதுள் நீரறுமா றகன்றிடல்நின் அருள்நீர் மைக் கமைவ தாமோ தொழுதகுநின் திருவடித் தொண் டினியாங்கள் பெறுவதெவன் சொல்கிற் பாயே’ 2. எஸ். வையாபுரிப் பிள்ளை - சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் - 3. (நேரிசை வெண்பா) 'அன்பொழுகு கண்ணும் அருளொழுகு நன்னெஞ்சும் இன்பொழுக விள்ளும் இதமொழியும் - என்றும் இனியுண்டோ உண்டோ எமதுசிவ ஞானத் தனியரசு வீழ்ந்ததன்பின் தான்’’. 3. இராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திரச் செட்டியார் - 4 (நேரிசை வெண்பா) ‘சாந்தனையும் தொண்டியற்றும் சார்புடையர் யாரவரே ஆந்தனையும் வீணறியா தாரெவரே - மாந்தரிடம்