பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 ஈறில்லா அன்புகுப்பான் இங்கிதமே கொள்கையராய் ஆறில்லார்க் காறளித்தார் ஆர்.” 4. சித்தாந்த ஆசிரியர் ந. சிவகுரு ா தப்பிள்ளை தூத்துக்குடி 5. (கொச்சகக் கலிப்பா) 'திருமணக்கும் முகமலரும் சிவமணக்கும் இன்சொல்லும் உருமணக்கும் திருநீறும் ஒளிமணக்கும் கண்டிகையும் அருள்மணக்கும் திருநோக்கும் அடியனேன் காண்ப தென்றோ தெருள்மணக்கும் குருமணியே சிவஒளியாய்ப் போந்தனையே’. 5. கவியரசு ஆர். வேங்கடாசலம் பிள்ளை - 4. (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 'அன்னதோர் திருமுகத்தை ஆர்வுறக் காண்ப மாயின் சொன்னலம் கனிந்த தேனாம் சொற்பொழி வுறுவ . மாயின் இன்னவிவ் வுலக மொன்றோ இந்திரன் வாழ்வும் . வேண்டோம் என்னினித் தொழுவோம் அன்னோன் இணையடி . மலர்கள் அம்மா! 6. புலவர் ஆ. சுந்தரராச உடையார், திருமுது குன்றம்-3. (கலி விருத்தம்) 'சிவமே எனுமாறு செந்தமிழ்நா டெய்திப் பவமாம் பிணிபோகப் பலவிரி வுரைசெய்த சிவசண் முகஞானச் செல்வமே பிரிந்தனை தவமே இனியுனைத் தானெவண் காண்பமே!’