பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 7. பாலகவி, வயிநாகரம் வே. இராமநாதன் செட்டியார் - 5 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 'வருவாரை முகமலர்ந்து வரவேற்று வயிற்றுணவு மகிழ்ந்து முன்னே தருவாய்பின் பவர் தகுதி தனையாய்ந்து சிந்தைகொளும் தன்மை வாய்ந்து பெருவாரி நலங்களெல்லாம் எளிதார இனிதளிப்பாய் பெரிய ஞான உருவாய தமிழ்க்கடலே ஒளித்தனையே யாம் செய்பிழை உரைத்திடாயோ?” 8. பண்டித ரத்னம் - குகபூர் - புழலை திருநாவுக்கரசு முதலியார் - 12 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 'இனியதமிழ் மணங்கமழும் சொற்சுவையும் பொருட்சுவையும் இரும்பூ தெய்த, கனியவரும் சர்க்கரைநற் பந்தலிலே தேன்மாரி பொழிந்த தொக்க நனி பெருகத் தன்னைத்தான் மறந்துபர வசமடைய நல்கும் வான்றோய் முனியுங்க வருமேலாய் வியந்துரைசெய் நயமொழியார் முனிவன் எங்கோன்’’. 9. வீ. திருஞான சம்பந்த முதலியார், மெய்கண்டார் கழகம், காஞ்சிபுரம் - 4 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 'உனைப்போலத் தமிழ் சைவம் இனிதோங்க உழைப்பவர்கள் உலகத்திலில்லை உனைப்போல உயிர்க்குறுதி பயக்குஞ்சொற் பொழிவாற்ற ஒருவர் இல்லை.