பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 159 உனைப்போல அவைத் தலைமைக் குரியரென இவ்வுலகில் ஒருவர் இல்லை. உனைப்போல அடியேனுக் கருள்புரிந்த ஞானகுரு உலகத்திலில்லை’. ஆ.பா. அரங்கையப் பத்தர், ஞானியார் மாணவப் பெரியார், திருப்பாதிரிப் புலியூர் - 5. (எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 'எந்நூலை எப்பொழுது எவர்கேட்டாலும் இசைந்தபடி மொழிந்திடுவான் பேச நின்றால் பைந்நாகம் தலைக்கணிந்தான் தோற்றம் போல்வான் பகர்ந்திடு நற் சகலகலை புராணம் வேதம் இந்நாணி லத்து மறைச் சொற்க ளெல்லாம் எனைச்சொல் எனைச்சொல் என்றே எதிரேநிற்கும் செந்நாக்குப் புலவர்களும் தியோர் நல்லோர் சேர்ந்துபயன் பெற்றிடுவர் சிறக்கக் கேட்டே' புலவர் வடிவேல் முதலியார், கோவல் தமிழ்ச்சங்கத் தலைவர், திருக்கோவலூர் - 9. (அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்) 'தமிழ்நாடெங் கணுஞ்சென்றே சைவமொடு தமிழ்ப் பயிரும் தழைக்க வேண்டி அமிழ்தினினும் இனிமையுள சொல்மாரி பொழிந்திடுநின் அருமை கண்டே உமைகனவன் கயிலையுள கணங்களுக்கும் நின்பெருமை உணர்த்த எண்ணி இமைப்பொழுதில் உனைக்கவர்ந்தே எமர்கலங்க மகிழ்வெய்தி இருக்கின்றானே’’.