பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 12. புலவர் க. வெள்ளை வாரணனார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் - 5 (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) "வள்ளுவர் சொல் பொதுமறையைப் போன்று பல்லோர் வளமுறநற் றமிழ்மறையைப் பொழியும் கொண்டல் எள்ளலிலா நின்னுரையின் ஏற்றம் காண்போர் இது முருகன் அருளெனவே நினைப்ப ரன்றிக் கொள்ளுவரோ வேறாக யாமென் செய்வோம் கோவல்நக ராதீனக் குரிசில் எங்கள் வள்ளல்முரு கிறைபொதினி வருநிற் கண்டு வழிமறித்துக் கொண்டானோ தமிழர் வாழ்வே' 13. வித்துவான் எஸ். துரைசாமி ஐயர், சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி முதல்வர், மயிலம் - 9 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) “அந்தோநம் ஞானவிறை தமிழரசு சொல்மணி நம் சைவ வேந்து அந்தோதம் பெயர்க்கேற்ப அரன்மகனின் பூசவிழா கண்ட அன்றே அந்தோநந் தனையகன்றே அரன்வடிவிற் கலந்ததென அறிய லுற்றே அந்தோ யாம் செயலழிந்து மனமழிந்து துயர்க்கடலில் அமிழ்கின் றேமால்'. 14. வித்துவான் ஏ.ஆர். முத்தையன், தியாகராயநகர்-3 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) “பண்புற்ற உளத்தினரும் காணாத பலபொருள்கள் பகிர்ந்து நின்றாய் எண்ணுற்றுக் கொடுவந்த இந்திமொழி மறுத்துரைப்பாய் இரும்பு விக்கோர்