பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 கண்ணுற்ற தமிழ்மொழியைக் கற்பித்தாய் கல்லூரி தனையுங் கண்டாய் எண்ணுற்ற குரவருள் நின் னெறிநின்று புகழடைந்தார். எவரே ஐயா!' 15. வித்துவான்முருக இலக்குவனார்-10 (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) "கடல்போலப் பெருமக்கள் கூடியபே - ரவையேனும் காணுங் காலை உடலுயிரா தியவெல்லாம் பறந்துண்மை உணர்வூறி ஊழிக் காலத்து அடல்விடையான் உருவெதிர்ந்த உயிர்த்தொகையோ லாமென்னின் அடிய ரேங்கள் நொடி மொழியால் அவனுடைய சொல்வன்மை தனை விரித்தல் நோன்மைத் தாமே". “ஞானி ஞானி என்றுபல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் ஞானி ஒருவனும் அல்லன் வாணியும் உண்டீண் டறிவுசிறந் தோளே”. - சுந்தர சண்முகன் இத்தகைய இரங்கற் பாக்கள் எண்ணற்றன எழுந்தும், ஞானியார் அடிகளார் இனியொரு முறை எழுந்து வருவாரா? ஞானியார் அடிகளாரின் புகழ் ஓங்கி வாழ்க!