பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ú 23. ஐந்தைத் தொடர்ந்து. ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார், சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்' என்னும் பட்டப் பெயருடன் 20-11-889 ஆம் நாள் பட்டம் ஏற் றார். 1-2-1942 ஆம் நாள் இறுதி எய்தினார். சுமார் 53 ஆண்டுகள் இவர் அருளாட்சி புரிந்துள்ளார். ஐந்தாம் பட்டத்திற்குப்பின், ஆறாம் பட்டத்து அடிக ளார், சிவ சண்முக சத்திய ஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும் பட்டப் பெயருடன் 2-2-1942 ஆம்நாள் பட்டம் ஏற்றார். பலவகை அரும் பணிகள் ஆற்றிய பின்னர் 15-12-1950 ஆம் நாள் இறுதி எய்தினார். இவர் சுமார் 9 ஆண்டு காலம் அருளாட்சி புரிந்தார். அடுத்து ஏழாம் பட்டத்து அடிகளார், ‘சிவ சண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும் பட்டப் பெயருடன் 15-12-1950ஆம் நாள் பட்டம் மேற் கொண்டார். அரும் பெரும் பணிகள் பல ஆற்றிய பின் 17-6-1986 ஆம்நாள் இறுதி எய்தினார். இவர் சுமார் 36 ஆண்டுகள் அருளாட்சி நடாத்தினார். அடுத்து எட்டாம் பட்டத்து அடிகளார், சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்’ என்னும் பட்டப் பெயருடன் 18-6-1986 ஆம்நாள் பட்டம் சூட்டப்பெற் றார். இப்பொழுது (1989) இந்த அடிகளார் அருளாட்சி புரிந்து வருகிறார். ஐந்தாம் பட்டத்து அடிகளார்க்குப் பின் வந்த அடிக ளார்கள் அனைவர் காலத்திலும், புலிசையில் வைகாசிப் பெருவிழா சொற்பொழிவும், கந்தர் சஷ்டி ஆறு நாள் சொற்பொழிவும், மார்கழித் திங்கள் 30 நாள் சொற் பொழிவும் வழக்கம்போல் நடைபெற்றன. இப்போதும் நடை பெறுகின்றன.