பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l@l<ആ{(ജ. ജൂ:'ഭൂ:'ആുഭൂ><തും?(ആ}}ആ) பதிப்புச் செம்மல் டாக்டர் ச. மெய்யப்பன் டாக்டர். ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்; திருக்குறள் இயக்கம், திருமுறை இயக்கம், தமிழிசை இயக்கம், தமிழ்வழிக்கல்வி இயக்கம் முதலிய தமிழிலக்கியங்களில் முழுமூச்சுடன் ஈடுபட்டு உழைப்பவர்; புலவர்குழு உறுப்பினர்; பல்கலைக் கழகங் களின் பதிப்புக்குழு உறுப்பினராகச் சிறப்பாகச்செயலாற்றி வருகிறார். இவர், தமிழ் நாட்டில் பல பல்கலைக் கழகங் களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்; பன்னிரண்டு நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது. தமிழ் நூல் வெளியீட்டுத் துறையில் சாதனைகள் பல புரிந்த செம்மலாகிய இவர் துறைதோறும் தமிழுக்கு ஆக்கம் தரும் நல்ல நூல்களை வெளியிடுவதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண் டுள்ளார். பதிப்புச் செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர். ళొ{<లి $ళ>{@$<2><రజాసాc>|<3><షాళE>