பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

ஆதீனம் - வருவார். புலிசையில் இருப்பினும், திருக்கோவ லூர்திருப்பாதிரிப் புலியூர் - என்றே வழங்கப்படும்.

 இந்நிலையில், நான்காம் பட்டத்து அடிகளார் மறைவ தற்குப் பதினாறு ஆண்டுகட்கு முன்பே, அருளகத்தை மேற்பார்வையிட்டுக் கவனித்துக் கொள்ள அவருக்கு உதவி தேவைப்பட்டது. அவர், திருநாகேச்சுரத்தில் இருந்தஉறவு முறையினரான அண்ணாமலையின் குடும்பத்தைப் புலிசைக்கு வரவழைத்துக் கொண்டார். அண்ணாமலை ஐயாவும் பார்வதி அம்மையாரும் தம் ஆறு திங்களேயான குழந்தை பழநியுடன் புலிசைக்கு வந்து அருளக மேற்பார் வைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். காவிரிக் கரை யில் (திருநாகேச்சுரத்தில்) பிறந்த ஆறு திங்கள் குழந்தை பழநி கெடிலக்கரைக்கு (திருப்பாதிரிப் புலியூருக்கு) வந்தது தமிழகத்தின் நற்பேறு ஆகும்.

கல்வி

 பழநிக்குப் படிக்கும் அகவை வந்ததும், தமிழ், தெலுங்கு, சமசுகிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
 புலிசையில் உள்ள அர்ச். சூசையப்பர் கிளைப்பள்ளி யில் பழநி சேர்ந்து படித்தார். அவருக்குத் தமிழ் ஆசிரியராய் வாய்த்தவர் தெய்வசிகாமணி என்பார். பள்ளிப்படிப்போடு, அருளகத்தில், சென்ன கேசவலுநாயுடு என்பவரால் நான்காண்டு காலம் பழநிக்குத் தெலுங்கு மொழி கற்பிக்கப்பட்டது. கி.பி. 1889-ஆம் ஆண்டு ப்ரி-மெட்ரிகுலேஷன் (Pre - Matriculation) படித்துக் கொண்டிருந்தார் பழநி, அப்போது அவருக்கு அகவை (வயது) பதினேழு.
 தாமும் வீரசைவம் பற்றிக் கற்பித்தும் பிறரைக்

கொண்டு கல்வி கற்பித்தும் ஐந்தாம் பட்டத்துக்கென்றே