பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

பழநியையைப் பண்படுத்தி வந்த நான்காம் பட்டத்து. ஞானியார். தமக்கு அண்மையில் இறுதிநேரப் போவதை எண்ணி, விரோதி-ஐப்பசி-3 (20-11-1889) ஆம் நாள், தம் கையாலேயே பழநிக்குத் துறவு தந்து, ‘சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் என்னும், பட்டப் பெயரும் சூட்டினார். அடுத்து சிலநாள் கடந்ததும் அவர், இறுதி எய்தினார்.

 எனவே, அடுத்த கார்த்திகைத் திங்க்ள் 7-ஆம் நாள் வியாழக் கிழமையன்று முறைப்படி பழநி பட்டத்து ஆட்சி ஏற்றார். பட்டம் ஏற்ற அடிகளார் வறிதே தசை மூட்டையை வளர்த்துக் கொண்டிருக்கவில்லை. ஒரளவு இசைத் தமிழ் பயின்றார்; பிடில் வாசிக்கக் கற்றார். உபய வேதாந்த கோவிந்தாச்சாரி என்பவரிடம் வடமொழி பயின்றார். பக்கத்து இணை நகரமாகிய கூடலூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய சி.மு. சுவாமிநாத ஐயரிடம் தமிழ் பயின்றார். தெலுங்கு நான் காண்டு காலமும், ஆங்கிலம் ஏழாண்டு காலமும், தமிழும் சமஸ்கிருதமும் பதினைந்து ஆண்டு காலமும் கற்று முழுப் புலமை எய்தினார். 
 சுவாமிநாத ஐயரிடம் தமிழ் கற்றபோது நிகழ்ந்த சுவையான செய்தி ஒன்று வருமாறு:- ஐயர் அருளகத்திற்கு வந்து பாடம் கற்பித்துச் செல்வது வழக்கம், யாப்பிலக் கணம் கற்பித்த காலத்தில் 'வீட்டிற்குப் புறப்படுவதற்கு முன், ஒரு செய்யுளைத் தந்து அதற்குச் சீர்தளை பிரித்து அலகிட்டு வைக்குமாறு சொல்லிச் செல்வது வழக்கம். ஒருநாள்,
    "நற்பா டலிபுரத்து நாதனே நாயினேன்
     பொற்பாம் தினதடியைப் போற்றினேன்-தற்போது
     வேண்டும் செலவிற்கு வெண்பொற்கா சுப்பத்து
     ஈண்டு தருக இசைந்து”