பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10

வாழ்நாள் முழுதும் இந்த அருட் பணியை அடிகளார் ஆற்றி வந்தார்கள்.

தூய உரைநடை :

 மக்கள் தமிழைக் கொச்சையாகவும் பிழைபடவும் பேசுவதை எண்ணி அடிகளார் மனம் நோவது வழக்கம் Kஒழுங்கான எழுத்து நடை என்பது, திருத்தமான பேச்சு நடையின் விளைவே” என்பது 'கிரீனிங்' (Greening) என்னும் அறிஞரின் கூற்று. ‘செந்தமிழும் நாப் பழக்கம்’ என்பது ஒளவையாரின் அமிழ்த மொழி (தனிப்பாடல்). எனவே, அடிகளார் தம் வாணாள் முழுதும், வருபவர்களிடமெல்லாம், எழுதுவது போன்ற தூய செந்தமிழ் நடையிலேயே உரையாடி வந்தார்கள். மற்றவர்க்கும் இது ஒரு 'மாதிரி' யாகும்.

3. அடிகளாரின் உருவத் தோற்றம்

 ஞானியார் அடிகளாரின் உருவத்தோற்றம் காண்பவரைக் கவர்ந்து அன்பு கொள்ளச் செய்யும். போதிய உயரம் - நடுத்தரமான பருமன் - அருள் ஒழுகும் கண்கள் - நீறு பூத்த பரந்த நெற்றி - ஆழ்ந்த எண்ணம் (சிந்தனை) கொண்ட திருமுகக் குறிப்பு-கால் குண்டலம்-கழுத்தில் உருத்திராக்கம் - மார்பில், சிவலிங்கம் உள்ளிருக்கும் பெட்டகம் போன்ற செச்சை - அட்டைக் கறுப்பு இல்லாத மாநிறம் சார்ந்த கருநிறம் - மழித்த தலை-காவி உடை - இன்ன பிற அமைப்பு கொண்ட அருள் வடிவம் எவரை யும் கவரும். அடிகளாரின் தோற்றப் பொலிவைக் குறித்துத் திரு.வி. கலியாண சுந்தரனார் எழுதியிருப்பது வருமாறு:
 “... முருகன்சேவடி வருடி உருகும் ஈர நெஞ்சும், அவன் புகழ்பேசி இனிக்கும் நன்னாவும், தண்மை பொழியும்