பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11

செவ்விய நோக்கும், வெண்ணிறு துதையும் நெற்றியும், மாணிக்கக் குழை பிறங்குஞ் செவியும் பொன்னொளிரும் மணிமார்பும், கருமைக்கதிர் விரிக்குந் திருமேனியும் 'சண்முகா.... சண்முகா’ என்று நீறளிக்கும் நீண்ட கையும் கொண்ட அடிகளின் திருவோலக்கப் பொலிவு என்னுள் ளத்தில் ஒவியமெனப் படிந்து நிற்கிறது. அஃது எவர் உள்ளத்தையுங் கவரும்; எவர்க்கும் எளிதில் இன்பூட்டும்" என்பது திரு.வி.க.வின் விளக்கம். இங்கே அடிகளாரின் தோற்றப் பொலிவில் மயங்குவதா? அல்லது திரு.வி.க. வின் தமிழ் நடையில் உள்ளத்தைப் பறிகொடுப்பதா? - புரிய வில்லையே!

 ‘வாதம் பாதி - வண்ணான் பாதி’ என்பது ஒரு வகைப் பழமொழி. வாதம் என்பது உடல் வளத்தைக் குறிப்பது, வண்ணான் என்பது உடைவளத்தைக் குறிப்பது. அடிகளார்க்கு உடைவளம் இல்லை - காவி உடைதான் எனினும், உருவத் தோற்றப் பொலிவு சிறந்திருந்தது. மற்றும், 'செட்டியார் மிடுக்கா - சரக்கு மிடுக்கா என்பது ஒரு வகைப் பழமொழி. ஞானியாரைப் பொறுத்த வரையி லும், செட்டியாரும் மிடுக்குதான் - சரக்கும் மிடுக்குதான். அவரிடம் வந்து இலவசமாகச் சரக்கு கொள்முதல் செய்து கொண்டு சென்றவர்கள் மிகப் பலராவர். அவர்களுள் ஒருவரின் உரை காண்பாம்.
 சென்னை - டிப்டி கலெக்டராயிருந்தவரும் இராவ் சாகீப் என்னும் பட்டம் பெற்றிருந்தவரும் ஆகிய கே. கோதண்டபாணிப் பிள்ளை அடிகளார் தோற்றப் பொலிவு பற்றி எழுதியுள்ள வியத்தகு உரை வருமாறு:-
 “ஞானியார் பெருமான் என்பார் யாவர் - எத்த்கையர் என நேரே காணுமாறு நெடுநாள் அவாவி ஒரு நாள் கண்டேன். காட்சியளவில் இவர்தம் வடிவும் அழகும்.