பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13

நிறுத்திக் கொண்டு, அடிகளார் திரு முகத்தையே நோக்கிய வண்ணம் இருப்பர்’’-

 மேற்கூறப்பட்ட சொல்லோவியங்கள் அடிகளாரை நேரில் காண்பது போன்ற நிலைமையை அளிக்கின்றன அல்லவா?


4. தோற்றுவித்த கழகங்களும்

பிற கழகங்களும்

 ஞானியார் அடிகளார் தம் காலத்தில் பல ஊர்களில் பல கழகங்கள் தோன்றச் செய்துள்ளார். அக்கழகங்களின் ஆண்டு விழாக்களில் தலைமை தாங்கிச் சொற்பொழிவாற்றியுள்ளார். சில விழாக்களில் வேறு யாராவது தலைமை தாங்கினும் தொடக்க உரையும் முடிவில் வாழ்த்துரையும் அடிகளார் அருளுவார். அக்கழகங்களின் பெயர்களும் அவை அமைத்துள்ள ஊர்களும் காலமும் வருமாறு :  

மதுரைத் தமிழ்ச் சங்கம் - மதுரை, 24-5-1901 வாணி விலாச சபை - புலிசை, ஞானியார் அருளகம்-1903. சைவ சித்தாந்தமகா சமாசம்- புலிசை - 7-7-1905. ஞானியிார் மாணவர் கழகம் - புலிகை திருக்கோவலூர். பக்த பால சமாசம் - மணம் பூண்டி - 20-9-1908. கம்பர் கலாமிர்த சங்கம் - திரு வெண்ணெய்நல்லூர் –24-10-1909. வாகீச பக்தசனசபை - நெல்லிக்குப்பம் - 25-4-1910 கலைமகள் கழகம் 1911-புதுச்சேரி புதுவைச் செந்தமிழ்ப் பிரகாச சபை- புதுச்சேரி