பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

சேர்ந்து ஒரு தமிழ்ச் சங்கம் அமைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

 பாண்டித் துரைத் தேவர் தமது தலைமை உரையில், வீற்றிருக்கும் தம் தமையன் பாஸ்கர சேதுபதி மன்னரிடம் கூறி, மதுரையில் தமிழ்ச் சங்கம் ஏற்படுத்த ஆவன புரிவதாக அறிவித்தார். ஞானியார் அருளகத்தில் விதை ஊன்றப்பட்டு விட்டது.
 சில திங்கள் கழித்து மன்னர் சேதுபதியவர்கள் திருவண்ணாமலை சென்று கார்த்திகை விளக்கு (தீப)விழாக் கண்டு வணங்கிப் பின்னர்த் தம் அரசக் குழுவுடன் (பரி வாரங்களுடன்) புலிசை ஞானியார் அருளகம் வந்து சேர்ந்து அடிகளாரோடு அளவளாவி மகிழ்ந்தார். அன்று மாலை அடிகளார் ஒரு சிறப்புச் சொற்பொழிவு செய்தார். முன்னமேயே பாண்டித் துரைத் தேவர் வாயிலாக அடிகளாரின் பெருமையைக் கேள்வியுற்ற் மன்னர், அடிக ளாரின் சொற்பெருக்கைக் கேட்டதும் மிகுந்த தமிழ்ப் பற்று உடையவரானார். ஊர் திரும்பியதும், போதிய பொருள் உதவி புரிந்து மதுரையில் ஒரு தமிழ்ச் சங்கம் (கலாசாலை) ஏற்படுத்துவதாக வாக்களித்தார்.
 'அவ்வண்ணமே, 24 5-1901-ஆம் நாள் மதுரையில் "தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றது. அது இப்போது நான்காம் தமிழ்ச் சங்கம் எனப் போற்றப் பெறுகிறது. சங்கத்துடன், சேதுபதி கலாசாலை என்னும் கல்வி நிறுவனம் ஒன்றும் நிறுவப்பெற்றது. செந்தமிழ் என்னும் திங்கள் இதழும் தொடங்கப்பெற்றது. காசு பெறாமல் உண்டியும் உறையுளும் மாணாக்கர்கட்குத் தந்து கல்வி பயிற்றப்பட்டது. பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் என்னும் மூன்று தேர்வுகள் முறையே நடத்தப் பெற்றன. பண்டிதத் தேர்வில் வெற்றி பெற்றவர்க்குப்