பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

1945-ஆம் ஆண்டு யான் புதுச்சேரியில் மருத்துவமனையில் படுக்கையாய்க் கிடந்தபோது, வீட்டு முகவரிக்கு வந்த சித்தாந்த இதழ் எனக்கு மருத்துவமனையில் கொண்டு வந்து தரப்பெற்றது. இன்று வளர்ச்சி குன்றியுள்ளது.

 ஒரு கருத்தை விளக்கத் தெரிந்ததிலிருந்து 'தெரியாததற்குச் செல்ல வேண்டும்' - 'அண்மையிலிருந்துசேய்மைக் மைக்குச் செல்ல வேண்டும்'- என்பது உளவியல் கருத்து. இதை ஒட்டி, இந்தக் கால இளைஞர்கட்குத் தெரிந்த திராவிட இயக்கக் கூட்டங்களை நினைவு படுத்தி, அதன் வாயிலாக, அவர்கள் அறியாத சமாசக் கூட்டங்களையும் மாநாடுகளையும் யான் அறிமுகப் படுத்தினேன்.
 சமாசத்தோடு எனக்கு இருந்த தொடர்பை அறிவித்ததும் இந்த நோக்கத்திற்கேயாகும். அன்று சமாச மாநாட் டில் பேசாத பெருந்தலைவர்கள் இல்லை எனலாம். சமாச மாநாட்டில் பேசும் வாய்ப்பு பெறுவதற்குப் பலர் முயன்ற துண்டு. அந்த அளவுக்குச் சமாசம் சிறப்புற்றிருந்தது.
 இதுகாறும் சைவ சித்தாந்த மகா சமாசத்தின் சிறப்புப் பெருமையை இவ்வளவு கூறியதற்கு உரிய காரணமாவது:-இதைக் கருவில் தாங்கிக் கருவுயிர்த்து வெளிக் கொண்ர்ந்து வளர்த்து உருப்படியாக்கி விட்டவர் ஞானியார் அடிகளார் என்பதை அறிவித்தலேயாகும்.
 அடிகளார் சைவத்தை வளர்ப்பதற்கு உரிய வழிமுறை களைத் தமக்குள்ளே ஆராய்ந்துகொண்டிருந்தார். அப்போது, திருப்பாதிரிப் புலியூரை அடுத்துள்ள கூடலூரில் ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை என்பவர் மாவட்ட நீதிபதியாக இருந்தார். அவர் அடிக்கடி அடிகளாரிடம் வருவார். சிவஞான போதம் என்னும் நூலைப் பாடம் கேட்டு ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். அவரிடம் அடிகளார்