பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20

இது பற்றிக் கலந்துபேசினார். அவர் சென்னை சென்று அறிஞர் பலரிடம் கூறி இம்முயற்சிக்கு ஆதரவு தேடினார். பலரது ஒத்துழைப்பு கிடைத்தது. இதன் பயனாக, விசுவாவசு ஆண்டு - ஆணித் திங்களில் (7.7.1905) 'சைவ சித்தாந்த மகா சமாசம்' என்னும் பெயருடைய நிறுவனத்தைத் தமது புலிசை அருளகத்திலேயே தொடங்கிவைத்தார். அதற்கு, நாவலர் பாடசாலை சதாசிவம் பிள்ளை தலைவராகவும், மறைமலையடிகள் செயலாளராகவும் அமர்த்தப் பெற்றனர். அடிகளார் அவ்வப்போது சமா ச வளர்ச்சியைக் கண்காணித்து வந்தார்.

ஞானியார் மாணவர் கழகம்:

 அடிகளாரின் முதன்மையான மாணாக்கராகிய மணம் பூண்டி ம.ரா. குமாரசாமிப் பிள்ளை, புலிசை அருளகத்தி லேயே ஞானியர் மாணவர் கழகம் என ஒன்றை நிறுவினார். ஞானியாரின் நூற்றுக் கணக்கான மாணவர்கள் அதன் உறுப்பினர்கள் ஆனார்கள். கழக விழாக்களில் அடிக ளார் தலைமை ஏற்று அரிய பொழிவு செய்வார்கள்.

புதுவைக் கலைமகள் கழகம்:

 புதுச்சேரியில் பங்காரு பத்தர் என்பவர் பெரிய புலவராய்த் திகழ்ந்தார். விரோதிகிருது - வைகாசி - முதல் நாள் (1911) கலைமகள் கழகம் நிறுவினார். இக்கழகத் தோடு தொடர்புடையவராயிருந்தவர்களின் பெயர்கள் வருமாறு: மகா வித்துவான் பெரியசாமிப் பிள்ளை, திருப் புளிசாமி, துணிக்கடை சு. அண்ணாமலை முதலியார், பெரிய அலுவலர் வி. முத்தைய முதலியார், பெரும்புலவர் வீ. துரைசாமி முதலியார், வேங்கடாசல நாயகர், கிரந்தே சிவ சங்கர செட்டியார், சிவ சச்சிதானந்த செட்டியார், சுப்பிரமணிய பாரதியார், வ.வெ. சுப்பிரமணிய ஐயர், கனக, சுப்புரத்தினம் (பாரதி தாசன்) முதலியோர் ஆவர்'