பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

 கலைமகள் கழக ஆண்டுவிழாக்கள் அடிகளாரின் தலைமையில் சிறப்பாக நடை பெறும். விழாவிற்கு வரும் அன்பர்கட்குக் கிரந்தே-சிவ சங்கர செட்டியார் விருந்து அளித்துப் போற்றுவார். அடிகளார் பூசனை புரியத் தம் முடன் முருகன் திருமேனியை எடுத்துச் செல்வது வழக்கம், அதற்குப் புதுவைச் செங்குந்த மரபினர் வெள்ளியால் திருவாசிகை செய்து அளித்துச் சிறப்புப் பெற்றனர்.

பார்க்கவ குலச் சங்கம்

 திருக் கோவலூரின் அருகில் உள்ளது மணம் பூண்டி அடிகளாரின் தலைமாணாக்கருள் ஒருவராகிய ம.ரா. குமாரசாமிபிள்ளை, தம் குல வளர்ச்சிக்காகத் தம் ஊரில் ஒரு சங்கம் நிறுவ விரும்பினார். 6-8-1911 ஆம் நாள் அடிகளாரை அழைத்துச் சென்றார். அடிகளார் தலைமை யில் அக்குலத்தினர் கூடினர். பார்க்கவ குலம் என்பது, திருக்கோவலூரை ஆண்ட தெய்வீக மன்னனின் குலம் ஆகும். கோவல் மலையமானும் அக்குலத்தவனேயாவான்.
 அன்று அடிகளார் தெய்வீக மன்னனைப் பற்றிச் சொல் மழை பொழிந்தார்; பார்க்கவகுலச் சங்கமும் தொடங்கி வைத்தார்; 1912-ஆம் ஆண்டு பார்க்கவ குலச் சங்கத்தின் முதல் ஆண்டு விழாவிற்குத் தலைமை ஏற்றுச் சிறப்புச் செய்தார். கோவல் சைவ சித்தாந்த சமாச ஆண்டு விழாவும், கோவல் ஞானியார் மாணவர் கழக ஆண்டு விழாவும் சேர்ந்து கொள்ள, மூன்று நாட்கள் தொடர்ந்து அடிகளார் அருளுரை வழங்கினார்.
 1913-ஆம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாசத்தின் எட்டாவது மாநாடு வேலூரில் நடைபெறுவதாய் முடிவு செய்யப்பெற்றது. தலைமை ஏற்க இசைவு தந்த அடிகளார் வேலூர் செல்லும் வழியில், திருவண்ணாமலையில் தங்கி