பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25

ஞானியார் பாட சாலை:

 ஞானியார் தம் அருளகத்திற்கு எதிரே உள்ள சொந்தக் காலி மனையை ஒரு கல்விக் கூடத்திற்காக விட்டார், அதில் 2-2-1917 ஆம் நாள், பாடலேசுரர் தரும பாடசாலை என்னும் பெயரில் ஒரு கல்விக் கூடம் திறக்கப்பட்டது. அதன் தலைமை ஆசிரியராக, அடிகளா ரின் தலை மாணாக்கருள் ஒருவராகிய உருத்திரசாமி ஐயர் என்பவர் அமர்த்தப் பெற்றார். பாடலேசுரர் தரும பாடசாலை என்பது வைக்கப் பெற்ற பெயராயினும் ஞானியார் பாடசாலை என்றே பெருவாரியாகப் பொது மக்களால் பெயர் வழங்கப் பெற்றது.
 சித்தார்த்தி - வைகாசி - 11-அடிகளார் தென்னாட்டுப் பயணத்தில் தஞ்சாவூரைச் சார்ந்த கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஏழாவது எட்டாவது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கிச் சிறப்புறச் செய்தார். சித்தார்த்தி - ஆனி - 21 ஆம்நாள், திருச்சி சைவ சிந்தாந்த சபையில் சொல்லாம் தேன் மாரி பொழிந்து அனைவரையும் மகிழ்ச்சியில் நனையச் செய்தார். ஆவணி 20 ஆம் நாள் பலவான்குடி 'மாணிக்க வாசகர்' மன்றம் ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி நடத்தினார்.

சமாசத்திற்குப் புத்துயிர்

 சைவ சித்தாந்த மகா சமாசம் இடையில் சரிவர நடைபெறாமல் சோர்வுற்றது. அடிகளார். அதற்குப் புத் துயிர் ஊட்ட விழைந்தார். பலருடைய பொருள் உதவியும் கிடைத்தது. 1924 - டிசம்பரில் திருப்பாதிரிப் புலியூரிலேயே தாம் தலைமை தாங்கி மூன்று நாட்கள் சிறப்பாக நடத்தினார்.
 அடிகளார் முதல் முறையாக 1927 - சூன் திங்களில் சென்னை நகர்க்குச் சென்றார். பேலஸ் தியேட்டர்