பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

சென்னைக்கு அழைத்தார். 1934-ஆகஸ்டில் அடிகளார் சென்னை போந்து, சூளையில் உள்ள பிள்ளையின் 'தியாகர் வில்லா' என்னும் மாளிகையில் தங்கிப் பல சொற்பொழிவு கள் அருளினார். மற்றும், மயிலாப்பூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகா சமாசத்தின் சிறப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெருமை செய்தார்கள்.

 1934-டிசம்பரில் திரு.வி. கலியாணசுந்தரனாரின் தலை மையில் திருவதிகையில்நடை பெற்ற சைவ சிந்தாந்த மகா சமாச மாநாட்டில் அடிகளார் தொடக்க உரையும் முடிவில் வாழ்த்துரையும் அருளி அனைவரையும் உவகைக் கடலில் ஆழ்த்தினார். 

மீண்டும் சென்னை செலவு

 சை.சி. ம. சமாசத்தின் செயலாளராகிய ம. பால சுப்பிரமணியமுதலியார் (M.A.,B,L.) சென்னைக்கு அருகில் உள்ள கோவூருக்கு வருகைதர வேண்டினார். 1935-மே திங்களில் அடிகளார் கோவூர் போந்தார். ஆங்குள்ள 'திருமேனிச்சுரம்’ என்னும் சிவன்கோயிலின் வைகாசிப் பெருவிழாவின் போது பல சொல்மாரிகள் பெய்தார். அடுத்து, நீதிபதியாயிருந்த வெ. ஆதிசேஷ முதலியாரின் வேண்டுகோளை மதித்துச் சென்னையில் உள்ள அவரது 'நால்வர் அருள்' என்னும் மாளிகையில் மூன்று திங்கள் காலம் தங்கிப் பல சொற்பொழிவுகள் ஆற்றியும் பலர்க்குப் பாடம் நடத்தியும் தமிழ்ப் பயிரும் சைவப் பயிரும் தழைத்துச் செழிக்கச் செய்தார்.
 மற்றும், சென்னையில், பர்மா எண்ணெய் வணிக நிலையப் பேராளராயிருந்த கோவிந்தராசன் என்பவரின் இல்லத்திலும், நெல்சன்டைப் பவுண்டரி உரிமையாளராம் மாணிக்கம் என்பவரின் 'கணேசர் கலியாண மண்டபம்’ என்னும் மாளிகையிலும் பன்னாள் எழுந்தருளியிருந்து