பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



30

பாடங்களும் சொற்பொழிவுகளும் அருளினார்கள். சென்னைப் பெருமக்கள் அடிகளார் பொழிந்த தமிழ் மழையில் நனைந்து குளிர்ந்து அகமகிழ்வு எய்தினர்.

 அடிகளார் 1937-ஏப்ரலில் மீண்டும் சென்னை சென்று, தம்மை அழைத்த க. அரங்கநாத முதலியாரின் தியாகராய நகர் இல்லத்திலும், சமரசச் செயலாளர் ம. பாலசுப்பிர மணிய முதலியாரின் மயிலாப்பூர் இல்லத்திலும் பன்னாள் தங்கினர். முன்னர் அழைத்த அன்பர்களின் இல்லங்கட்கும் மீண்டும் அழைக்கப் பெற்றனர். ஆங்கெல்லாம் அடிகளா ரின் அமிழ்தத் தமிழ்க் குரல் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
 1937-டிசம்பரில் வேலூரில் நடைபெற்ற சைவ சித்தாந்தமகா சமாசத்தின் மாநாட்டுக்கு அடிகளார் தலைமை தாங்கி நடாத்தினார். அங்கே அடிகளார்க்குக் காய்ச்சல் நோய் கண்டு பலரது கவலைக்கு இடம் தந்தது பின்னர் உடல் நலம் உண்டாயிற்று, அடிகளார் 'சைவ ஒழுக்கம்’ என்னும் ஒரு நூல் தொகுத்து அனைவர்க்கும் வழங்கியருளினார்.

கரந்தை வெள்ளி விழா:

 தஞ்சையைச் சார்ந்துள்ள கருந்தட்டாங்குடி என்னும் ஊரில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் சங்கம் 1911-ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது என்பதும், அதன் ஏழுஎட்டாம் ஆண்டு விழாக்கள் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றன என்பதும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளன.
 இந்தச் சங்கம் தமிழகத்தில் உள்ள மாபெருஞ் சங்கங்களில் ஒன்றாகும். திருவையாற்றில் தமிழ்க் கல்லூரி தோன்றச் செய்தவரும் வழக்கறிஞரும் தமிழுக்கும் சைவத்திற்கும் தம் வாழ்நாளைச் செலவிட்டவரும் ஆகிய த.வே.