பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



31

உமாமகேசுவரம் பிள்ளையின் தலைமையில் இச்சங்கம் இயங்கி வந்தது.

 இச்சங்கத்தின் வெள்ளி விழா 1938-ஏப்ரலில் ஞானி யார் அடிகளாரின் தலைமையில் நடைபெற்றது. இந்த வெள்ளி விழா, மற்ற சங்கங்கள் வெள்ளிவிழா நடத்து வதற்கு ஒரு 'மாதிரி' விழாவாய் அமைந்தது.
 விழாவின் சார்பாகப் 'புலவர் கல்லூரி' என்னும் கல்லூரி ஒன்று அடிகளாரின் திருக்கையால் வித்தூன்றித் தொடங்கிவைக்கப் பெற்றது. இப்போது இது பெரிய ஆல மரமாய்ப் பரந்து விரிந்து பயனளித்துக் கொண்டுள்ளது. அடுத்து, உமாமகேசுவரனார்க்குத் 'தமிழவேள்' என்னும் தங்கமான பட்டத்தையும், பேராசிரியர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளைக்குக் 'கவியரசு' என்னும் பட்டத்தையும் அடிகளார் விழாவில் வழங்கினார்கள். மற்றும், மாபெரும் புலவராகிய தாரமங்கலம் அ. வரத நஞ்சையப் பிள்ளை இயற்றிய 'தமிழரசிக் குறவஞ்சி, என்னும் நூல் அரங் கேற்றப் பெற்றது. மேலும், பேரறிஞர்கள் பலர் வழங்கிய அரிய பெரிய கட்டுரைகள் அடங்கிய 'கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாமலர்' என்னும் மிகப் பெரிய மலர் ஒன்றும் அடிகளார் திருக்கையால் வெளியிடப் பெற்றது.
 அவ்விழாவில், சங்கத்தினர், அடிகளார் இவர்ந்து செல்லச் சிவிகை (பல்லக்கு) ஒன்று செய்து அளித்தனர். பிற்காலத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது இந்தச் சிவிகையே யாகும். இவ்வாறு பல வகையிலும் கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழா பெருஞ் சிறப்புப் பெற்றது. தமிழ் அன்னையின் திருக்கோயில்களுள் இந்தச் சங்கமும் ஒன்றாகும்.