பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



32

 இந்த வெள்ளிவிழா ஒரு 'மாதிரி' வெள்ளி விழா என்று முன்பு குறிப்பிட்டுள்ளேன். அல்லவா? இது தொடர் பாக, 'ஒன்றினம் முடித்தல் - தன்னினம் முடித்தல்' என் னும் இலக்கணக் கொள்கைப்படி ஒரு செய்தி கூற விழை கிறேன். புதுச் சேரியில் கல்விக்கழகம்’ என்னும் சிறந்த கழகம் ஒன்று உள்ளது. இதனை தேசிகப் பிள்ளை என் பாரும் திருநாவுக்கரசு என்பாரும் மிகவும் சிறப்பாக இயக்கி வந்தனர். இவர்கள் இருவரும் கரந்தைச் தமிழ்ச் சங்க வெள்ளிவிழாவிற்குச் சென்று நேரில் கண்டறிந்து வந்தனர்.
 அங்கு நடந்தது போலவே, புதுவைக் கல்விக் கழகத் தின் வெள்ளி விழாவை 1951 - ஆம் ஆண்டு நடத்தினர். விழா ஒரு வாரம் நடைபெற்றது. பேரறிஞர்கள் பலர் தலைமை தாங்கியும் சொற்பொழி வாற்றியும் புதுவை மக்களைப் புளகாங்கிதம் எய்தச் செய்தனர். கரந்தையில் நூல் அரங்கேற்றம் நடந்தது போலவே, அந்தக் கழகப் புலவராகிய யான் இயற்றிய 'செந்தமிழ் ஆற்றுப்படை' என்னும் நூல் அரங்கேற்றப் பெற்றது. கரந்தையில் பட்டம் கொடுத்தது போலவே, க. சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப்பெற்ற 'இயற்கவி’ என்னும் பட்டமும் கேடயமும் பாராட்டிதழும் எனக்கு அளிக்கப் பெற்றன பேரறிஞர்களின் கட்டுரைகள் நிறைந்ததும் என்னால் ஆய்ந்து பதிப்பிக்கப்பட்டதும் ஆகிய புதுவைக் கல்விக் கழக வெள்ளி விழா மலர், என்னும் பெரிய மலர், வெளி யிடப் பெற்றது. இஃதும் புதுவையில் ஒரு மாதிரி வெள்ளி விழாவாகும்.

மறுபடியும் சென்னை:

 ஞானியர் மறுபடியும் 1939-ஆம் ஆண்டு, சென்னையை அடுத்த கோவூர் திருக்கோயிலிலும், சென்னை சிம்புமல்