பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நடைபெற்றது. அந்தக் கழகம் தொடர்ந்து நடைபெற்றது. 1942-ஆம் ஆண்டு - அச்சங்க ஆண்டு விழாவில் - திரு.வி.க தலைமையில் யான் 'தமிழ் நாட்டுத் தெய்வம்' என்னும் பொருள் பற்றிச் சொற்பொழிவாற்றியுள்ளேன்.

செஞ்சி மாநாடு:

 அடிகளார் சிவபுரி முதலாய பதிகட்குச் சென்று சொற்பொழிவாற்றி வந்தபின், செஞ்சி தாசில் தாராயிருந்த எம். கிருஷ்ண முதலியார் என்பவர் செஞ்சியில் ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தார். அடிகளாரைத் தலைமை தாங்கி நடத்தித்தர வேண்டினார். 1940-மே 3-ஆம் நாள் முதல் மூன்று நாட்கள் அடிகளாரின் அமிழ்த உரையால் மாநாடு பெருமை பெற்றது. வரவேற்பு மிகுதி.

கோவலூரில் வீற்றிருப்பு

 சிறிது காலம் அடிகளார் கோவலூரில் நிலையாகத் தங்கி யிருந்தார். திருப்பாதிரிப் புலியூர் திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்ததன்றோ? முதல் பட்டத்து அடிகளார் அமைத்த அருளகமும் திருக்கோயிலும் அவரது அடக்கமும் கோவலூரிலே உள்ளன. தமக்கு உரிய அந்த அருளகத்திலேயே அடிகளார் வீற்றிருந்தார்.
 அங்கே அடிகளார் கோவல் தமிழ்ச் சங்கத்தின் சார் பாக வாரக் கூட்டச் சொற்பொழிவுகள் செய்துவந்தார். அச்சங்கத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று 25-12-1940 - இல் நடைபெற்றது. கூட்டத்திற்கு அடிகளாரின் முன் னிலையில் உமாமகேசுவரனார் தலைமை தாங்கினார். அஞ்ஞான்று, விழுப்புரம் நகராட்சி ஆணையாளராயிருந்த 'ஆட்சி மொழிக் காவலர்' கீ. இராமலிங்கனார் திரு வாசகம்’ என்னும் தலைப்பிலும், யாழ்ப்பாணம் பேரா சிரியர் க. மதியாபரணர் 'இயேசுவும் வள்ளுவரும்’