பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



37

சொல்லாகப் பிரித்துக் காட்டி, பிறகு பதவுரை கூறிப் பின்பு கருத்துரை வழங்குவர். இஃது உளவியல் முறைக்கு (Psychological Method) ஏற்றதன்று.

 மக்கள் தனித் தனிச் சொல்லாகப் பேசுவதில்லை. சொற்றொடராகவே - வாக்கிய மாகவே பேசுகின்றனர். இதற்கேற்ப, முதலில் பாட்டை இசையுடன் படித்துக் காட்டி அதன் கருத்தை வாக்கியமாகச் சொல்ல வேண்டும். பிறகு விரிவான பொழிப்புரையாகக் கருத்து விளக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்துவிட்ட பின்பு பாட்டைப் படித்தாலேயே தானே ஒரளவு பொருள் விளங்கும். அதன்பின்னர், பாடலை வாக்கியம்-வாக்கிய மாகப் படித்துக் காட்டிப் பொருள் விளக்கம் செய்ய வேண்டும். பொருள் புரிந்து கொள்ள முடியாத அருஞ் சொற்கள் இருப்பின் அவற்றிற்கு மட்டும் பொருள் கூறிப் பின்னர் ஒரு முறை பாடலைப் படித்துக் காட்டினாலேயே முழுப் பாடலின் பொருளும் விளங்கிவிடும். இதுதான் இன்றைய உளவியல் முறை.
 இவ்வாறு கற்பிக்கும் முறை அடிகளாரிடம் இயற்கை யாக அமைந்திருந்தது. முதலில் பாடலின் கருத்தைச் சொல்வார் - பின்னரே பொழிப்புரை - பின்பே பத விளக்கம். யானும் இம் முறையைப் பிற்காலத்தில் பின் பற்றினேன்' என் மாணாக்கர் சிலரும் இம்முறையைப் பின் பற்றுகின்றனர்.
 இலக்கிய மேற்கோள்கள் - சொல் நயம் - இலக்கணச் சிறப்பு ஆகியவற்றுடன் அடிகள் பாடம் கற்பித்ததால் மாணாக்கர் பலர் வந்து கற்றுப் பயன் பெறலாயினர். பாடம் நடந்துகொண்டிருக்கும்போதே புதியவர் எவரே னும் வந்து அமரின், அவரும் பாடத்தைத் தொடர்வதற்கு வசதியாக முன் நடந்த பாடத்தின் சுருக்கம் சொல்லித்