பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

- உலகு எலாம் உணர்ந்து ஒதுதற்கு அரியவன் - இனி ஒரு முறை பாடல் முழுமையும் பார்க்கலாம்.

 "உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன்
 நிலவு உலாவிய நீர்மலி வேணியன் 
 அலகு இல் சோதியன் அம்பலத்து ஆடுவான் 
 மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்"-
 இந்த முறையில் ஞானியார் அடிகளார் சில நேரத்தில் பாடல்களைக் கற்பிப்பதும் உண்டு. கற்பிக்கும் முறை களுள் வினவிக் கொண்டே - வினா எழுப்பிக் கொண்டே பாடம் கற்பிப்பது, கற்பிக்கும் முறைகளுள் மிகச் சிறந்த ஒன்றாகும் என்பது, கல்வி உளவியலாரின் (Educational Psychologists) கருத்தாகும். இந்த முறைகளையெல்லாம் அடிகளார் கையாண்டு கற்பிப்பதால், மாணாக்கர்கள் மகிழ்ந்து பாடம் கேட்டு வந்தனர். அடிகளாருடன் அனை வரும் பாடத் தொடக்கத்திலும் முடிவிலும் கடவுள் வணக்கப் பாடல் பாடுவர்.
 யாரும் எப்பொழுதும் வந்து பாடம் கேட்கலாம். மாணவர்க்கு வசதியான நேரத்திலும் கற்பிக்க ஒத்துக் கொண்டு பாடம் கற்பிப்பார். அடிகளார்க்கு இரண்டு முறை கட்டி வந்து அறுவை மருத்தும் செய்யப்பட்டது. ஒரு முறை கால் ஒடிந்து போக அதற்கு உரிய மருத்துவம் செய்யப்பட்டது. நோய் தெளிந்தும் தெளியாததுமாய் இருக்கும்போதே அடிகளார் சாய்வு நாற்காலியில் சாய்ந்த படி பாடம் நடத்துவார். பாடம் கற்பிக்கும் இன்பத் தில் நோய்த்துன்பம் மறைந்துவிடும்.
 பாடம் நடத்துங்கால், வாய்ப்பு நேரும் போது, சீர் திருத்தக் கருத்துகளை வலியுறுத்தவும் அடிகளார் தவறுவ தில்லை. ஒருமுறை புறநானூறு பாடம் நடத்திக்கொண்டி