பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
  ஏய உணர்விக்கும் என்னம்மை - தூய
  உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
  இருப்பளிங்கு வாரா திடர்' -
 
  'தந்தைதா யாவானும் சார்வதிங் காவானும்
   அந்தமிலா இன்பநமக் காவானும் - எந்தமுயிர்
   தானாகு வானும் சரணாகு வானுமருட்
   கோனாகு வானும் குரு' -

 என்னும் பாடல்களும் இடம் பெறும். இவை முறையே, பிள்ளையார், முருகன், கலைமகள், ஆசான் (குரு) ஆகி யோரைப் பற்றியனவாகும்.
 மற்றும், 'பூமேவு' என்று தொடங்கும் சிவன் பாடலும் 'உரையேறு' என்று தொடங்கும் சிவை பாடலும் இடம் பெறுவதுண்டு. சொற்பொழிவின் முடிவுரையை,“ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க் குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்” என்னும் பாடலும் கந்தர் அனுபூதி நூலின் இறுதிப் பாடலான 

'உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
   மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
  கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே'

என்னும் பாடலும் மற்றும் சிலவும் இறுதியில் அணி செய்யும்.
 அடிகளார் தமது முடிவுரையில், மற்ற பேச்சாளர் களின் தலைப்புகளைப் பற்றியும் ஆழ்ந்த கருத்துகள்