பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

களாரின் சொற்பொழிவுச் சிறப்பைப் பற்றி இன்னும் என்ன சொல்ல வேண்டும்!

 புலிசை அருளகத்தில் ஆண்டுதோறும் வழக்கமாகக் கந்தர் சஷ்டி விழா நடைபெறும் ஆறு நாட்களிலும் சொற் பொழிவு நடைபெறும் - மற்றும், மார்கழித் திங்கள் முழுவதும் காலையில் பாவைச் சொற்பொழிவுகள் உண்டு. மணிவாசகரின் திருவெம்பாவையும் திருப்பள்ளியெழுச்சியும் சொற்பொழிவு உருவம் பெறும். மேலும், புலியூர்ச் சிவன் கோயிலில் வைகாசிப்பெருவிழா நடைபெறும் பத்து நாட்களிலும் சொற்பொழிவு உண்டு. அன்றியும், ஒவ்வொரு ஞாயிறு மாலையிலும் சொற்பொழிவு நிகழும். கிருத்திகை போன்ற சிறப்பு நாள்களிலும் சொற்பொழிவு உண்டு. இவ்வாறாக, ஆயிரக்கணக்கான சொற்பொழிவு கள் ஞானியார் அடிகளாரால் நிகழ்த்தப் பெற்றுப் பல் லோரைக் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவராக்கியுள்ளன.
 சொற்பொழிவுக்குக் குறித்தநேரத்திற்குச் சிறிது முன்ன தாகவே அடிகளார் வந்து அமர்ந்து விடுவார். மற்றவர் களால் காலத் தாழ்ப்புஏற்பட்டாலொழிய, அடிகளாரால் குறைநேராது. குறித்த நேரத்தில் சொற்பொழிவு தொடங் கப்பட்டுவிடும்.

6. இரு பொருள் - சொல்நயம்

 இரண்டு பொருள்படப் பேசுவதைச் 'சிலேடை அணி' என வடமொழியில் கூறுவர். தமிழில் 'இரட்டுற மொழிதல்' என்பர். இந்தக் காலச் சொற்பொழிவாளர்களுள் கிருபானந்த வாரியாருக்கு இது கைவந்த கலையாகும். வாரியாருக்குப் பாடம் கற்பித்த ஞானியார் அடிகளாரும் இரட்டுற மொழிதலில் வல்லவர்.