பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



49

இரு கையும் பல கையும்

 திருவையாறு பரமசிவம் என்னும் துறவி ஒருவர் சிறிது காலம் புலிசை ஞானியார் அருளகத்தில் வந்து தங்கியிருந் தார். அவர் ஒருநாள் எண்ணெய் தேய்த்துத் தலை குளிக்க விரும்பினார். அதன்படி, பணியாளர், அவருக்காக ஒரு கையில் எண்ணெய் உள்ள கிண்ணமும் மற்றொரு கையில்யில் சிகைக் காய்த்துளும் கொண்டு வந்தார். அதைக் கண்ட ஞானியார் அடிகளார் இருகை போதுமா? பலகை வேண்டும் என்றாராம். பலகை என்றால், அமர்ந்து எண்ணெய் தேய்த்துக் கொள்ளக் கீழே இடுவதற்கு மரப் பலகை - அதாவது மணை வேண்டும் என்பது பொருள்.

நெடுமாலை

 திருவயிந்தரபுரத்தில், 'மார்கழித் திங்கள்’ என்னும் பொருளியல் அடிகளார் ஒரு முறை சொற்பொழிவாற்றி னார். அவரை அழைத்துச் சென்ற அந்த ஊர் திருமால் கோயிலார் அடிகளாருக்கு நீண்ட மாலை ஒன்று அணிவித்த னர். உடனே அடிகளார் நான் நெடு மாலை அடைந்தேன் என்று கூறினார். நெடு மாலை என்பது நீண்ட பூமாலை என்னும் பொருளையும் நெடியோனாகிய திருமாலை என் னும் பொருளையும் தருகின்ற தன்றோ. இந்த இரு பொருள் நயத்தை அனைவரும் சுவைத்தனராம்.

வெள்ளைப் பாதிரி

 திருப்பாதிரிப் புலியூரில் பாதிரி மரம் கோயில் மரம் (தல விருட்சம்) ஆகும். அதனாலேயே அந்த ஊருக்கு பாதிரிப் புலியூர் என்னும் பெயர் ஏற்பட்டது. அவ்வூர்க் கோயிலில் பழங்காலத்தில் இருந்த பெரிய பாதிரி மரம் : பட்டுப் போயிற்று. அதைச் செப்புக் கவசத்தால் மூடி வைத்திருப்பதை இன்றும் காணலாம். திருக்கோயிலின்