பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



50

மேற்குத் திருச்சுற்றில் (சுற்றுப்பிரகாரத்தில்) பாதிரி மரங்கள் இப்போதும் உள்ளன.

 பாதிரிப்பூவில் சிவப்புப் பாதிரி, வெள்ளைப் பாதிரி என இருவகை உண்டு. சிவனுக்குச் சூட்டச் சிவப்புப் பாதிரி மலரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பது மரபு. வெள்ளைப் பாதிரி மலரைச் சிவனுக்கு அணிவதில்லை. இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஞானியார் அடிகளார் 'சிவபூசனைக்கு வெள்ளைப் பாதிரி பயன்படுவதில்லை' என்று சொற்பொழிவில் கூறினார். இங்கே, வெள்ளைப் பாதிரி என்பது, வெள்ளைப் பாதிரி மலரைக் குறிப்பதன்றி, வெள்ளைக்காரக் கிறித்தவப் பாதிரி சிவ பூசனை செய்வதில்லை என்னும் குறிப்புப் பொருளையும் தருகின்ற தன்றோ. இந்த இரு பொருள் நயத்தை மிகவும் மகிழ்ந்து சுவைத்தனர்.

கார்க்கூர் - காற்கூறு

 அடிகளார் அன்பர்களின் வேண்டுகோட்கிணங்கிக் குடியேற்றம் (குடியாத்தம்) போந்து சிறப்பித்த காலை, அவ்வூர்க்கு அருகிலுள்ள 'கார்க்கூர்’ என்னும் ஊரினராகிய பெருஞ் செல்வர் வந்து, தம் ஊருக்கு எழுந்தருளும் வண்ணம் அடிகளாரை வேண்டினர். இசைந்த அடிகளார் அவ்வூருக்கு ஒரு நாள் இரவு 8 மணிக்குச் சென்றார். ஆங்குள்ள ஒரு புதிய கட்டடத்தில் அடிகளாரைத் தங்கச் செய்தனர். நள்ளிரவு 2 மணிக்கு அடிகளார் சிறுநீர் கழிக்கப் பின்புறம் சென்றார். அங்கே, குறடும் அதன் அடித் தளமும் வெண்சுதை பூசப்பட்டிருந்ததால், குறடு என்றும் அடித்தளம் என்றும் வேறுபாடு அறியாமல், அடிகளார் குறடு என்று எண்ணி அடித்தளத்தில் காலை ஊன்றினார். அதனால் நிலைமாறிக் கீழே விழுந்துவிட்டார். கணுக் காலில் முறிவு ஏற்பட்டு விட்டது. பிறகு அன்பர்கள் அறிந்து