பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

வேண்டிய முதல் உதவி மருத்துவம் புரிந்தனர். அடிகளார் அன்பர்களை நோக்கி, கார்க்கூருக்கு வந்ததால் 'காற்கூறு' நேர்ந்து விட்டது என நயம் பெறக் கூறினார். இங்கே 'காற்கூறு' என்பது, காற்கு ஊறு - அதாவது - காலுக்கு இடையூறு ஏற்பட்டு விட்டது என்னும் பொருளைத் தருவதை அறியலாம். கார்க்கூர்’ என்பது கார்க்கு ஊர் காருக்கு (மேகத்திற்கு) மேகம் மழை பொழிதற்கு ஏற்ற ஊர் என்னும் பொருளைத் தருவதையும் அடிகளார் குறிப்பிட்டார்.

குறட்டை விடுதல்

 ஒரு சமயம் அடிகளார்க்குத் துடையில் கட்டி வந்தது. அறுவை மருத்துவம் நடந்தது. புலிசை பு.ர. சுவாமிநாத முதலியாரும் அவர் மனைவி இராசேசுவரி அம்மையாரும் - ஏன் - அக்குடும்பத்தார் அனைவரும் அடிகளாரின் அருகு இருந்து மருத்துவப்பணிவிடை செய்தனர். இராசேசுவரி அம்மையார், மருத்துவர் கூறிய அளவுப்படி அவ்வப் போது மருந்து கொடுத்து வந்தார். ஒரு நாள் இரவு மருந்து தரவில்லை. மறு நாள் காலை அடிகளார் அம்மை யாரை நோக்கி, இரவு மருந்து கொடுக்க வில்லையே’ என்றாராம், அதற்கு அம்மையார் அடிகளாரை நோக்கி, 'நீங்கள் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தீர்கள் - எழுப்ப வேண்டாம் என்று எண்ணி மருந்து தரவில்லை என்றார். அதற்கு அடிகளார் நான் குறட்டை விட்டுத் துரங்க வில்லையே - குறட்டின் மேல்தானே படுத்துத் தூங்கினேன் என்றாராம். கேட்டவர்கள் அனைவரும் இந்த நகைச்சுவை விருந்தைச் சுவைத்தனர்.

சண்முகா - சண்முகம்

 யான் திருவையாற்று அரசர் கல்லூரியில் வித்துவான் பட்டத்திற்குப் படித்தேன். திருவையாறு செல்வதற்கு