பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



52

முன்பே, அடிகளார், ஒரு பிள்ளையார் சதுர்த்தி நாளன்று தொடங்கிக் கிரந்த மொழி கற்றுத் தந்தார். மற்றும் ஞானியார் அருளகத்தில், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை, பிரபுலிங்க லீலையின் முற்பகுதி, பழமலை யந்தாதி, நால்வர் நான் மணி மாலை, சோன சைல மாலை முதலிய நூல்களைப் பாடம் கேட்டு விட்டேன். என் ஒரு வகுப்பு மாணாக்கர்கட்குப்(class mate)பிரபுலிங்க லீலை என்னும் நூலைத் த.வே. உமாமகேசுவரம் பிள்ளையும் நன்னூல் என்னும் நூலை ஞானியார் அடிகளாரும் இலவசமாக வாங்கித் தந்தனர்.

 திருவையாற்றில் வித்துவான் படிப்பு 1936 சூலை முதல் 1940 மார்ச்சு வரை நான்காண்டுக் காலம் எடுத்து கொண்டது. எனது 15,16,17,18 ஆகிய நான்காண்டு அகவைக் (வயதுக்) காலத்தில் வித்துவான் படித்து முடிந்தேன்.
 சொந்த ஊர் வண்டிப் பாளையம். ஒரு முறை விடுமுறை கழிந்ததும் திருவையாற்றுக்குப் புறப்பட்டேன். யான் சிறிய பையன். திருப்பாதிரிப்புலியூர்ப் புகைவண்டி நிலையத்திற்குப் புகைவண்டி நள்ளிரவு 1-40 மணிக்கு வரும். அதில் ஏறிச் சென்றால் விடியலில் தஞ்சை அடையலாம். அங்கிருந்து பேருந்தில் திருவையாறு செல்ல வேண்டும். இந்நிலையில், நள்ளிரவு 1-40 மணிக்கு வண்டியைப் பிடிக்க வேண்டுமெனில் வண்டிப் பாளையத் திலிருந்து தனியாகக் கண்விழித்துக் கொண்டு உரிய நேரத்தில் வண்டியைப் பிடிப்பது கடினம்.
 அதனால் யானும் எனக்குத் துணையாக என் தந்தை யாரும் இரவு 10 மணிக்கே ஞானியார் அருளகம் வந்து படுத்துக்கொண்டோம். அருளகத்தின் முற்பகுதியில் உள்ள பெரிய சொற்பொழிவுக் கூடத்தின் தென்புறம் அடிகளார்