பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



53

படுத்துக்கொண்டார்.யானும் என் தந்தையாரும் வடபுறம் படுத்துக் கொண்டோம்.இரவு ஒரு மணிக்காவது விழித்துக் கொண்டால்தான் விரைவில் புகைவண்டி நிலையம் போய்ப் பயணச் சீட்டு வாங்கிக் காத்துக்கொண்டிருக்கலாம். நிலையம் அருகில்தான் உள்ளது.

 இரவு ஒரு மணியளவில் அடிகளார் சண்முகா - சண்முகா என்று ஒலி எழுப்பினார், பின்னர் சண்முகம் - சண்முகம் என்று ஒலியெழுப்பி யிருக்கின்றார். உடனே என் தந்தையார் என்னின எழுப்பிவிட்டார். அடிகளாரிடம் விடைபெறச் சென்றபோது, "நான் எழுப்பாவிடின் நீங்கள் விழித்திருக்கமாட்டீர்கள் போலும்' என்று அடிகளார் அடிக்கடி'சண்முகா - சண்முகா' என்று சொல்வது வழக்கம். என் தந்தையார் அதைக் குறிப்பிட்டு, அடிகளாரை நோக்கி 'சுவாமிகள் சண்முகா - சண்முகம் என்ற போது நான் விழித்துக் கொண்டு தான் இருந்தேன், நீங்கள் முருகனைச் 'சண்முகா' என விளிப்பதாக எண்ணி வாளா இருந் தேன்’ என்று கூறினார். அதற்கு அடிகளார், யான் அந்தச் சண்முகத்தையும்தான் அழைத்தேன் -இந்தச் சண்முகத்தை யும்தான் அழைத்தேன்’ என்று புன்முறுவலுடன் கூறினார். சண்முகம் என்பதிலும் அடிகளார் சொல்விளையாட்டு செய்தார். எனக்குத் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - நச்சினார்க்கினியர் உரைநூலை அடிகளார் தந்து நீயே வைத்துக்கொண்டு படி என்று அருளினார். நாங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கித் திருநீறும் விடையும் பெற்றுச் சென்றோம்.

இருந்தாரானார்

திருப்பாதிரிப் புலியூர் அருளகத்தில் அடிகளார் ஒரு நாள் அன்பர்கட்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது, கரும் புள்ளியிட்ட கடிதம் ஒன்று வந்தது. அடிக