பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



54

ளார் பிரித்துப் படித்தார். கரும்புள்ளி இருந்ததால் இறப்புச் சேதியாய் இருக்கலாம் - யாரோ - எவரோ என அன்பர்கள் உள்ளம் துடித்துக்கொண்டிருந்தனர். கடிதத் தைப் படித்து முடித்த அடிகளார், அன்பர்களை நோக்கி சோழ வந்தான் அரசஞ் - சண்முகனார் இருந்தாரானார். என்று கூறினார். உடனே அன்பர்கள், "இறந்தாரானார்", என்று கூறுவதற்குப் பதில், வாய் தவறிப் பிழையாக 'இருந்தாரானார்’ என்று கூறிவிட்டார் என எண்ணி ஒருவர்க் கொருவர் மெதுவாகச் சொல்லிக் கொண்டன ராம். இதைக் குறிப்பால் அறிந்த அடிகளார், அரசஞ் சண்முகனார் முன்னொரு காலம் இருந்தார் என்று கூறக் கூடிய நிலையை அடைந்து விட்டார் என்று கூறினார். பின்னரே அன்பர்கள் நிலைமையை அறிந்து, அடிகளாரின் சொல்பொருள் நயத்தை வியந்தனராம்.

வருவாய்

 அடிகளாரின் மற்றொரு வகைச் சொல் நயத்தைக் காண்பாம். சொற்பொழிவின் இறுதியில் அடிகளார்

"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
  மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
  கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
  குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" -

 என்னும் கந்தர் அனுபூதிப் பாடலைக் கூறுவார். 'முதலில் இவ்வாறு கூறியதும், பின்னர், உருவாய் அருவாய் வருவாய் - உளதாய் இலதாய் வருவாய் - மருவாய் (மணமாய்) மலராய் வருவாய் - மணியாய் ஒளியாய் வருவாய் - கருவாய் உருவாய் வருவாய் - கதியாய் விதியாய் வருவாய் - என இரட்டை இரட்டையாய்ப் பிரித்துக் கூறி, இறுதியில் குருவாய்' வருவாய்' என்று பாடிக்காட்டுவார்கள். கேட்கும் அன்பர்கள் உணர்ச்சிவசப்படுவர்.