பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

ஆனால் ஞானியார் அடிகளார் மேற்குறிக்கப் பெற்ற வர்களிலிருந்து விதி விலக்காயிருந்தார். முதலில் தாய தமிழில் - கொச்சையில்லாத இலக்கணத் தமிழில் பேச வேண்டும் என்று ஒர் இயக்கம் தொடங்கி அதை நடை முறையில் அடிகளார் செயல்படுத்தி வந்தார். இதைக் கண்டு ம்ற்றவர்களும் அடிகளாரிடம் தூய தமிழில் பேசி வந்தனர் - வெளியிலும் பேசலானார். இஃது ஒரு தமிழ்ப் பணி.

 தமிழ் நூல்களை நிரம்பப் படித்து, அவற்றைப் பலர்க் கும் கற்பித்துப் பெரும் புலவர்களாக்கியது மற்றொரு தமிழ்ப்பணி. 
 தமிழின் பெருமையைச் செல்லும் இடங்களிலெல்லாம் எடுத்து இயம்பியது அடுத்ததொரு தமிழ்ப்பணி. செய்யாறு பாநுகவி மாணவர் கழகத்தில் அடிகளார் தமிழ்மொழியின் பெருமையை மிகவும் விரிவாக விளக்கிய செய்தி இந்நூலில் வேறோரிடத்தில் காணலாம். அந்தக் காலத்தில் அடிகளாரைப் போல ஆரியமும் ஆங்கிலமும் கற்றவர்கள் செய்யாத பணி இது. 
 அடிகளார் தாமே தமிழ்க் கல்வி நிறுவனம் தொடங்கி நடத்தியதல்லாமல், தமது முயற்சியால் தமது தூண்டு தலால், மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமையச் செய்தது மாபெருந் தமிழ்த் தொண்டாகும். 
 தமிழ்கற்பதும் தமிழில் பேசுவதும் தாழ்வென்றும், தமக்குத் தமிழ்பேசத் தெரியாது என்று சொல்வதைப் பெருமை என்றும் கருதிய கோடரிக் காம்புகள் மிகுதியாக இருந்த காலத்தில், அடிகளார் இவ்வாறு தமிழ் இயக்கம் தொடங்கி நடத்தியது மிகவும் போற்றத்தக்கதாகும்.
 அடிகளாரின் தமிழ்ப் பணி பற்றி இந்நூலில் தனித் தலைப்பு இட்டு எழுத வேண்டிய கட்டாயங்கூடத் தேவை