பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

மிக்க அன்புடையவர் உமாமகேசுரம்பிள்ளை. அவர் தஞ்சை மாவட்டக் கழகத் துணைத் தலைவராயிருந்தார். அவரை அடிகளார் தம் இருப்பிடத்திற்கு அழைத்து இது பற்றி உரையாடினார். அக்கல்லூரி தொடர்பான அறக் கட்டளையை ஆராயச் சொன்னார். அப்போது அம் மாவட்டக் கழகத்தின் தலைவராயிருந்தவர் சர்.ஏ. டி. பன்னீர்செல்வம், Bar-at-Law, என்பவர். உமாமகேசுவரம் பிள்ளை பன்னீர்செல்வத்தைக் கலந்து பழைய அறக் கட்டளைச் செப்புப் பட்டயத்தைப்படி எடுத்துக்கொண்டு பன்னீர் செல்வத்தையும் உடன் அழைத்துக்கொண்டு. புலிசை ஞானியார் அருளகம் வந்தார். அந்த அறக் கட்டளை பொதுவாகக் கல்வி வளர்ச்சிக்கு உரியது என்றே எழுதப்பட்டிருந்தது. எனவே, தமிழையும் கற்பிக்கலாம் என அடிகளாரின் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. இரு வரும் தஞ்சை சென்றபின், அக்கல்லூரியில் தமிழ் வித்து வான் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள், வட மொழிக் கல்லூரி என்னும் பெயரை மாற்றிப் பொதுவாக 'அரசர் கல்லூரி, (Raja's colloge) என்னும் பெயர் சூட்டி னார்கள். அக்கல்லூரியில் பயின்ற தமிழ்ப் புலவர்கள் பதினாயிரக் கணக்கானவர் என்று கூறலாம். ஞானியார் அடிகளாரின் முயற்சியால் ஒரு தமிழ்க் கல்லூரி ஏற் பட்டதைப் பலரும் அறிந்து பாராட்டினார்கள்.

 அடிகளாரின் தமிழ்ப் பணி பற்றி இன்னும் என்ன சொல்ல வேண்டும்!