பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

முறை என்னும் நூலுக்கு அடிகளார் கூறிய குறிப்புகளைச் சேர்த்துக் 'கந்தர் அநுபூதி' என்னும் நூலை வெளியிட்டுள்ளார்.

 அடிகளார் ஆண்டு தோறும், புலிசையில் கந்தர் சஷ்டி விழா செய்யும் ஆறு நாட்களிலும் சொற்பொழி வாற்றுவார்கள். அந்தச் சொற்பொழிவுகளை முத்து. இராசாக் கண்ணனார் குறிப்பு எடுத்து, கந்தர் 'சஷ்டிச் சொற்பொழிவுகள்' என்னும் பெயரில் நூலாக வெளியிட் டள்ளார். 
 ஈரோடு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அடிகளார் 'அன்பு' என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு கட்டுரையுருவம் பெற்றுக் 'குடியரசு' இதழில் வெளி வந்தது. இவ்வாறு, அவ்வப்போது சில சொற்பொழிவுகள் சில இதழ்களில் வெளிவந்துள்ளன. 
 பாடல் இயற்றும் புலமையும் அடிகளார்க்கு உண்டு. அவ்வப்போது சில தனிப் பாடல்கள் எழுதியது உண்டு. அவற்றுள் ஒன்றையாவது இவண் காண்பாம்.
 வெ. ஆதிசேஷ முதலியார் என்பவர், சென்னையில் உள்ள தம் 'நால்வர் அருள் என்னும் இடத்திற்கு அடிக ளாரை அழைத்துப் போற்றி வணங்கிப் பல சொற்பொழிவு கள் செய்யவைத்தார். அவ்விடத்தினின்றும் அகன்றதும் அடிகளார் அவருக்கு நன்றி தெரிவித்துப் பின்வரும் பாடலை எழுதியனுப்பினார்:-
   "நல்லாதி சேடப்பேர் நண்ப இது காண்க 
    எல்லா நலனும் எய்துக - பொல்லாத 
    சூரர் தடிந்து சுரருக் கருள்புரிந்தோன் 
    பேரருளைப் பெற்ற நலத் தால்"

என்பது அப்பாடல். அடிகளார் 'சைவ ஒழுக்கம்’ என்னும்