பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

நதிதனை யடைவர் மலையினை அடைவர்
      நானிலம் வலம்வரு வார்கள்
   விதியிது என்னைப் பலபல செய்வர்
      விளங்கநான் இவையெலாம் செய்யேன்
   அதிகைவாழ் திலக வதிப்பெயர் அம்மை
      அடைவனே நீகதி யாக"

 அடிகளாரின் செய்யுள் யாக்கும் திறனுக்கு இப்பாடல்களே போதுமான சான்றுகளாகும்.
 மற்றும், அடிகளார், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் திருப்பாதிரிப் புலியூர்த் தோத்திரக்கொத்து, அற்புதத் திரு வந்தாதி முதலிய நூல்களை அச்சில் பதிப்பித்த பதிப் பாசிரியராகவும் விளங்கியுள்ளார். 

கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள்

 ஞானியார் அடிகளாரின் ஒரு வரிசைச் சொற் பொழிவுகள் முத்து. இராசாக் கண்ணனாரால் நூல் வடிவம் பெற்ற 'கந்தர் சஷ்டிச் சொற்பொழிவுகள்’ என்னும் நூல் பற்றி ஒரு சிறிது காண்போம்;
 1941 -ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள் கந்தர் சஷ்டி நாட்களில் அடிகளார் ஆற்றிய ஐந்து சொற்பொழிவு களின் தொகுப்பு இது. அடிகளாரின் ஒப்புதலுடன் இராசாக் கண்ணனார் நூல் வடிவம் தந்தார். இந்நூலின் முகப்பில் அடிகளாரின் ஒப்புதல் அச்சிடப்பட்டுள்ளது.

அது வருக :- .

சிவமயம்

சிவ சண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க. திருக் கைலாய பரம்பரை, திருக்கோவலூ ராதீனம்,

 பூரீமத் ஞானியார் மடாலயம்
                   சந்நிதி வீதி
              திருப்பாதிரிப் புலியூர்
     "நாங்கள் அடிகளார்) விசு ஐப்பசியில் கந்தர்