பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சஷ்டித் திருவிழாவில், மடாலயத்தில், ஐந்து நாட்களிலும் செய்த சொற்பொழிவுகளைக் கேட்ட தி.கு. இராசாக்கண்ணு முதலியார் சொற்பொழிவுகளைக் செய்யும் வேளையிலேயே எழுதி வந்தனர். அவற்றை அச்சிடல் வேண்டும் எனக் கருதினர்.அச்சிட்டவற்றைப் பார்த்தோம். நாங்கள் பேசினவையே பெரும்பாலும் ஒத்திருக்க எழுதப்பட்டிருக்கின்றன. இம்முயற்சி யொரு நல்ல முயற்சியே; பலர்க்கும் பயன்படலாம் என எண்ணுகின்றோம். இவரது நன்முயற்சி மேன்மேலும் ஓங்குக. இவரும் நலம் பல பெற்று வாழ்க.

(தற்போ திருப்பு) இங்ங்னம் திருவண்ணாமலை கைஒப்பம்
7-12-’41. ஞானியார் மடாலயம்

 இச் சொற்பொழிவு நூலின் சிறப்பை, முது பெரும் புலவராய்த் திகழ்ந்த ந.மு. வேங்கடசாமி நாட்டார் இந் நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையாகிய கருத்துரையைக் கொண்டு அறியலாம். அது வருக :-

கருத்துரை

 கரந்தைப் புலவர் கல்லூரியின் தலைவராகிய நாவலர் பண்டித திரு ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதியது.
 தமிழ் நாட்டிலே கல்வியிலும் சொல்வன்மையிலும் மக்களை நல்வழிப்படுத்தும் தவநெறி யொழுக்கத்திலும் இஞ்ஞான்று தலைசிறந்து விளங்கும் பெரியார் திருப் பாதிரிப் புலியூர் திரு ஞானியார் மடத்தின் தலைவராகிய மறைத்திரு. ஞானியாரடிகள் என்பதனை அனைவரும் அறிவர். ஏறக் குன்றய அரை நூற்றாண்டின் மேலாக நாடெங்கனும் உலாப்போந்து தமது பொருள் நிறைந்த சொல்மாரிகளால் மக்கள் உள்ளத்தைக் குளிர்வித்து வரும்