பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



66

 இவ்வளவு சிறப்புடைய இச்சொற்பொழிவு நூலின் முதல் ஒரு பக்கச் செய்திகளை மட்டும் மாதிரிக்காக இனிக்காண்பாம்:

க. தோற்றம் காலா தீதன்:

    "மெய்யன்பர்களே!
 கிடைத்தற் கரிய மனிதப் பிறவியை எடுத்துள்ள நாம் காலத்துக்குட் பட்டிருக்கின்றோம். காலம் என்பது ஒரு தத்துவம், சிவாகமங்களில் கூறியாங்கு, அது, மாயையில் - அசுத்த மாயையில் தோன்றுகின்றது. தத்துவங்கள் மூவகையின. அவை, ஆத்துமதத்துவம் - வித்தியா தத்துவம் - சிவதத்துவம் எனப்படும். அவை முறையே 24 ஆம்-7 ஆம்-5 ஆம் மூன்றும் முப்பத்தாறு என்க. இம் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மக்களாகிய நாம் அடங்கிக்கிடக் கின்றோம். இவற்றைக் கடந்து நிற்பவன் கடவுள். இத் தத்துவங்கள் அறிவற்றன. நாம் அற்ப அறிவினை யுடை யோம்; ஆதலின் இவற்றிற்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றோம். முற்றறிவினனாகிய முழுமுதற் கடவுள் பொதுவாக முப்பத்தாறு தத்துவங்களுக்கும், சிறப்பாகக் காலத்திற்கும் அப்பால் இருக்கின்றான், அவன் பெயர்களில் ஒன்று, கால காலன் என்பது. அத்தொடருக்கு இருவகைப் பொருள்கள் உள: சாத்திர விற்பத்தி(நூற்பொருள்) - சரித்திர விற்பத்தி (வரலாற்றுப் பொருள்) என. முன்னதின்படி காலம் என்ற தத்துவத்தைக் கடந்தவன் என்க. பின்னதின்படி எமனுக்குப் பகைவன் என்க. இக்கருத்தினை வலியுறுத்தும் மற் றொரு பெயர் 'காலாதிதன்' (காலங் கடந்தவன்) என்பது,
 நாம் செய்ய வேண்டுவது காலத்தை யொட்டிக் காலத்தை வெல்வதே. கண்ணுடைய வள்ளலாரால் இயற் றப்பட்ட ஒழிவிலொடுக்கத்தில், 'தத்துவக் கழற்றி'