பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

யிருந்த செய்யாறு புலவர் கா. கோவிந்தனும் ஒரு சொற்பொழிவில் தாம் ஞானியாரிடம் பாடம் கேட்டுள்ளதாக அறிவித்தார்.

காஞ்சி. க. வச்சிரவேல் முதலியாரும் இத்தகையவரே என் இளமைக் காலத்தில் பெண்மணி ஒருவர் புலிசை அருளகத்தில் பாடங் கேட்டுப் புலவரானார்; அவர் பெயர் நினைவில்லை. கிறித்துவக் கன்னிமார்கள் சிலர் வந்து இலக்கணப் பாடம் கேட்டுள்ளனர். மாவட்டத் துணை ஆட்சியாளராக (டெபுடி கலெக்டர்) இருந்த அரங்கசாமி முதலியாரின் மனைவியாராகிய க.ர. ஆதிலட்சுமி அம்மையார், அடிகளாரிடம், கந்தரனுபூதி, திருப்போரூர்ச் சந்நிதி முறை முதலிய நூல்களைப் பாடம் கேட்டுள்ளார். அடிகளார் கூறிய குறிப்புரைகளுடன் கந்தரனுபூதியையும் திருப் போரூர்ச் சந்நிதிமுறையையும் வெளியிட்டுள்ளார்கள்.

மற்றும், புலிசையைச் சேர்ந்த இரத்தினவேல்பிள்ளை, இராசேசுவரம் பிள்ளை, பால சுப்பிரமணிய முதலியார், பு.ர. சுவாமிநாத முதலியார், அரங்கைய பத்தர், பு.வே. தேவராச முதலியார், சந்நிதி வீதி திருநாவுக்கரசு நாயகர், முதலியோரும், கிழக்கு மருதுர் சி. நாராயண சாமி நாயுடுவும், நெல்லிக்குப்பம் பாலசுந்தர நயினாரும் வண்டிப் பாளையத்தைச் சேர்ந்த சாமிநாத முதலியார், தோணி கந்தசாமி முதலியார், உருத்திர சாமி ஐயா முதலியோரும், இன்னும் யான் அறியாத பற்பலரும் புவிசை அருளகத்திலேயே பாடம் கேட்டவராவர்.

அடிகளாரின் புலிசை அருளகத்தில் பாடம் கேட்டு, உயர்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பணி ஆற்றிய - ஆற்றிக் கொண்டிருக்கின்ற புலவர் பெருமக்களின் பெயர்களையும் பணியிட ஊர்களின் பெயர்களையும் யான் அறிந்த வரையும் கீழே தருகிறேன்: