பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை





11. வெள்ளணி விழாக்கள்

வெள்ளணி விழா என்பது பிறந்த நாள் விழாவைக் குறிக்கும். நாண் மங்கலம் (நாள் மங்கலம்) என்றும் இதனைக் கூறுவது உண்டு.

மணிவிழா

ஞானியார் அடிகளாரின் அறுபதாண்டு நிறைவு மணி விழாவும் அறுபத்தோராவது பிறந்தநாள் விழாவும் திருமுக (பூ முக) ஆண்டு வைகாசி மூல(1933-மே) நாளில் சிறப்புற நடைபெற்றன. மகாமகோ பாத்தியாய பண்டித மணி மு.கதிரேசச் செட்டியார் தலைமை தாங்கினார். வழக்கமான பேரறிஞர்களும் பெரும்புலவர்களும் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி அடிகளாரை வாழ்த்தியும் அடிகளாரின் வாழ்த்தைப் பெற்றும் மகிழ்வு எய்தினர். அறிவு ஞாயிறாம் அடிகளார், அவ்விழாவின்போது, தம் அருளகத்திலேயே ஒரு கல்விக் கூடம் திறந்து தமிழ்க்கல்விக் கதிர் எங்கும் பரவ ஏற்பாடு செய்தார். பள்ளியின் வளர்ச்சிக்காகப் பத்தாயிரம் உருபா முதல் பொருளும் வைத்தார். அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணாக்கர் கள் சேர்ந்து பயின்று புலமை பெற்றார்கள். அவர்களுள் அடியேனும் (சு.ச.) ஒருவன்.

மற்றும், அவ்விழாவில், கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்டு தலைமை தாங்கி நடத்திப் பல கல்வி நிறுவனங் களும் தோற்றுவித்த த.வே. உமாமகேசுவரம் பிள்ளை யின் தமிழ் வளர்ச்சியைப் பாராட்டி அவருக்கு அடிகளார். ‘செந்தமிழ்ப் புரவலர்’ என்னும் சீர்மிகு பட்டம் வழங்கிச் சிறப்பித்தார், விழாவின் நினைவாக, தமிழ் வளர்க்கும் சில இதழ்களின் (பத்திரிகைகளின்) வளர்ச்சிக்காகப் பொருளுத வியும் புரிந்தார் அடிகளார். தாம் தொடங்கிய கல்விச்