பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

சாலைக்கு உருத்திரசாமி ஐயா அவர்களைத் தலைமை ஆசானாக அமர்த்தித் தமிழ்ப் புலவர் பட்டம் பெறுதற்கு உறுதுணையாகப் பலர்க்குத் தமிழ்க் கல்வி கற்பிக்கச் செய் தார் அடிகளார். அங்கே அரும்பி மலர்ந்து வெளியூர்களில் மணம் வீசிக்கொண்டிருக்கும் புலவர் பெருமக்கள் பல [Тпт6т/т,

நூற்றாண்டு விழா

17-5-1873 ஆம் நாள் பிறந்த ஞானியார் அடிகளார் 69 - ஆம் அகவையில் ஊனுடல் துறந்தார். அதன்பின், அவர் பிறந்து நூறாண்டு நிறைந்த நாளாகிய - பிரமாதீச ஆண்டு - வைகாசி - 7 - மூல நாளில் - அதாவது - 20-5 -1973 ஆம் நாளில் அடிகளாரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட, அடிகளாரின் அன்பர்களாலும் மாணாக்கர் களாலும் நூற்றாண்டு விழாக்குழு அமைக்கப் பெற்றது.

சென்னை முத்து இராசாக் கண்ணனார், விழுப்புரம் ந. ஆறுமுக முதலியார், வண்டிப் பாளையம் அ. நடேச முதலியார், சிதம்பரம் க. வெள்ளைவாரணனார், கிழக்கு மருதூர் கி. நாராயணசாமி நாயுடு, புலிசை க. வேல் முருகன், கூடலூர் இரா. பழநியாண்டி முதலியார், மயிலம் ஆ. சிவலிங்கனார், புதுச்சேரி சுந்தர. சண்முகனார் கூடலூர் க. சம்பந்தனார், வண்டிப் பாளையம் ந. தண்ட பாணி, புலிசை ந. கருணானந்தனார், குடந்தை திருநாவுக் கரசு, நெல்லிக்குப்பம் பா. செந்தில் நாயகம், புலிசை வள்ளி விலாஸ் உரிமையாளர் குடும்பத்தினர், சிதம்பரம் பு.ர. சுவாமிநாத முதலியார், புலிசை ஞானியார் அருள கத்தைச் சேர்ந்தவர்கள் - முதலியோர் நூற்றாண்டு விழாக் குழுவில் பங்கு கொண்டு பணி புரிந்தனர்.

நூற்றாண்டு விழாவை ஒரு வாரம் நடத்துவதென்றும், விழா நினைவாக ஒரு தமிழ்க் கல்லூரி அமைப்பது