பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


ஞானியார் அடிகளின் பிறந்தநாள் விழா நூற்றாண்டு விழாவோடு நின்றுவிட வில்லை. தொடர்ந்து இன்று வரை யும் ஆண்டு தோறும் பிறந்தநாள் விழா பல சொற் பொழிவுகளுடன் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகிறது. 1985-ஆம் ஆண்டு நடைபெற்ற ஞானியார் அடிகளாரின் பிறந்த நாள் விழாவில், எனது (சுந்தரசண்முகத்தின்) கெடில வளம் என்னும் நூல் வெளியிடப் பெற்றது; எனக்கு ஆராய்ச்சி அறிஞர்' என்ற பட்டமும் பதக்கமும் பாராட்டுரையும் வழங்கப் பெற்றன. இனியும் ஆண்டு' தோறும் அடிகளாரின் வெள்ளணி விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.




12. பொன்விழா

பொன்விழா என்றால் ஐம்பது ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கும். முதலில் அறுபதாண்டு, நிறைவாகிய மணி விழாக் குறிப்பிட்டு விட்டு, பின்னர் ஐம்பது ஆண்டு நிறைவாகிய பொன் விழாவைக் குறிப்பிடலாமா-எனப் பலரும் எண்ணக் கூடும். இது, இங்கே, அடிகளார் பிறந்து ஐம்பது ஆண்டு நிறைந்த பொன் விழாவைக் குறிப்பிட வில்லை. அடிகளார் துறவு கொண்டு அருளாட்சி ஏற்று ஐம்பது ஆண்டு நிறைந்த பொன் விழாவைக் குறிப்பதாகும்.

அடிகளார் 29-11-1889 ஆம் நாள் அருட்குரவராகப் பட்டம் ஏற்றார். அதற்கு ஐம்பதாம் ஆண்டாகிய 1939 ஆம் ஆண்டின் நவம்பர் 18, 19 ஆம் நாள்களில் ஞானியார் அருளகத்திலேயே பொன் விழா நடத்த, அன்பர்களும் மாணாக்கர்களும் கூடி ஏற்பாடு செய்தனர்.