பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76 முதல் நாள் காலை அடிகளாரை இறைவனாகவே கற்பனை செய்து கொண்டு, அன்பர்களும் மாணாக்கர் களும் அடிகளாரைத் திருமுழுக்கு ஆட்டிப் பூசனையும் புரிந்து வழிபட்டனர். 'முருகன் திருவிளையாடல் என்னும் தலைப்பில் அடிகளார் சொல்லமிழ்து பொழிந்தார். மாலையில் விழாக் கூட்டம் தொடங்கியது. இலக்கியத் திறனாய்வு செய்வதில் வல்லவரும் இரசிகமணி' என்னும் பட்டம் பெற்றவரும் டி.கே.சி. எனச் சுருக்கமாகச் பெயர் வழங்கப் பெறுபவரும் ஆகிய டி.கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது, அறிஞர் பலர் சொற்பெருக்காற்றினர். டி.கே.சி. வழங்கிய புகழொலி அரங்கம் முழுதும் நிறைந்து ததும்பியது. வெளியூர்களிலிருந்து வந்த பாராட்டுரைகளும் வாழ்த் துரைகளும் குன்றெனக் குவிந்திருந்தன. இரண்டாம் நாள் காலை பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை தலைமை தாங்க, சொற்பொழிவுகள் பெருக்கெடுத்தன. விழாவில். தோத்தி ரக் கொத்து', அடிகளாரின் குறிப்புரையுடன் கூடிய “கந்த ரனுபூதி என்னும் நூல்கள் வெளியிடப் பெற்றன. மற்றும், சேலம் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராய் விளங்கிய ஆந்திரக் காசியப அந்தணர் என்பவர் அடிகளார்மீது இயற்றிய "ஆசான் ஆற்றுப் படை’’ என்னும் நூல் அரங்கேற்றம் செய்யப் பெற்றது, அடிக ளாரின் பெருமையை அந்நூலில் பரக்கக் காணலாம். மாலையில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியாரின் தலைமையில் விழா நடைபெற்றது. பெரும் புலவர்களாகிய ந.மு. வேங்கடசாமி நாட்டார், ச.சச்சிதானந்தம் பிள்ளை முதலியோர் சொற்கொடை நல்கினர். விழாவின் தொடர் பாக, சைவமும் தமிழும் வளர்க்கும் சில இதழ்களுக்கு (பத்திரிகைகட்டு) நன் கொடைகள் அனுப்பப் பெற்றன.