பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

மிகுந்த மழையினால் போக்கு வரவு தடைபட்டதால் இன்றியமையாத பெரியோர்கள் பலர் நேரில் வந்து விழாவில் கலந்துகொள்ள முடியாமையால் வாழ்த்துத் தந்தி களும் கடிதங்களும் அனுப்பியிருந்தனர். அவர்களுள், ஈ.வே. இராமசாமி, பி.டி. இராசன், த.வே: உமாமகேசு வரனார், திவான் பகதூர் டி.எம் நாராயணசாமி பிள்ளை, யாழ்ப்பாணம் நடேசப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத் தக்கவராவார்கள்.

இப்பொன்விழா தொடர்பான வாழ்ந்துப் பாக்களும் பாராட்டுக் கட்டுரைகளும் பல இதழ்களில் வெளிவந்து 'தமிழ் கூறும் நல்லுலகிற்கு அடிகளாரின் பெருமையைப் பரப்பின. இவற்றுள், சென்னைத் துணை மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்த கே. கோதண்டபாணி பிள்ளை, கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி முதலியோரின் பாராட்டுக் கட்டுரைகள் மிகவும் குறிப்பிடத் தக்கவை. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடன் இதழில் பல பக்கங்கள் பாராட்டி எழுதி இருந்தார். பேராசிரியர் முத்து. இராசாக் கண்ணனார் சித்தாந்தம் இதழில், விழாபற்றிய குறிப்புரை வெளியிட்டார். கூடலூரில் உயர் பதவி ஏற்றிருந்த சு. நடராசன் என்பவர் தமிழ் அணங்கு என்னும் இதழில் எழுதி அந்த இதழுக்குப் பெருமை சேர்த்தார். அவற்றின் சுருக்கம் வருமாறு:

சித்தாந்தம்:

சென்னை, டிப்டி கலெக்டர், ராவ் சாகிப், கே. கோதண்டபாணி பிள்ளையவர்கள் எழுதிய கட்டுரை.

ஞானியார்:

'இச்சிறு சொற்பெரும் பொருட் பெயர் தாங்கிய அடிகளைத் தமிழ்நாடு நன்குணரும். இவர் இயற்றும் தமிழ்த்தொண்டினைப் போற்றுவோர் பலர். இவர்