பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

புலமையைப் புகழும் புலவர் பலர். இவர் நல்லுரை கேட்டு நலமுறுவார் பலர். சிறிதேனும் இப்பெரியார்பாற்

  • f *

கண்டன. சில எழுதலுற்றேன்.

இச் சிற்றுரையை நீங்கள் உணரத் தொடங்குமுன் உங்களை ஒன்று வினவ விரும்புகின்றேன். இச்சிற்றுரையின் தலைப்பையே வினாவாக்கிக் கொள்வீர்களாக, ஞானி - யார்? இக்காலத்தில் நம் நாட்டில் ஞானம் உடையவர் யார்?யார் உளர்? வீடு பயக்கும் உணர்வினையுடையார் அல்லது தருவார் யார், யார் உளர்? அன்பு நெறியிலும் அறிவு நெறியிலும் திளைப்பவர் யாவர் உளர்? எங்கெங் குத்தேடினும் அடிகளன்றி யாருளர் காண்போம். சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்றடங் கறிஞர்” அடிக ளன்றி யாருளர்? தேர்ந்து அறிந்து தெரிவிப்பீராக! . இவர் புதுமையை அறவே நீக்கிப்பழமையிற் பழுத்த பழை யர் போலும்! இவர்பால், புதியன புகுந்தார் போற்றும் உரையும் செயலும் காண்பது எங்ங்னம் என ஐயுற்றேன். ஐயம் தெளியுமாறு தேடி நின்றேன். சிறிது பொழுதில் இப்பெருமான் ஒரு சொற்பொழிவாற்றுவர் எனக் கூறினர் சிலர். அடிகளின் சொல்லுரை கேட்டுத் துணிதலே நலம் எனத் துணிந்திருந்தேன்.

சொல்மழை தொடங்கிற்று. முதுநீர் நிலையிற் புதுநீர் சேர்ந்தது. புரண்டெழுந்தது வெள்ளம், அன்பு நெறியை அளாவிற்று. அறிவு நெறியும் புக்கது. அலைகள் சுமந்தன அறிவும் செறிவும். கலையின் நிறைவு நுரையின் மிதந்தது. சுவையும் கனிவும் சுழித்திருத்தன. வெள்ளத்துள் ஆழ்ந் தேன் யாண் டொளித்ததோ என் ஐயம்! என்னை மறந். தேன் - மிதந்தேன். இறுதியில் தன் நினைவு சிறிது முளைத் தது. என்னுடனிருந்தார் எண்ணிலார், என்னாயிரென உற்றுநோக்கினேன். என்னிலும் மிதந்தனர் ஏனையோர்,