பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

என்னே சொல்வன்மை என்னே சொல் வளம்! தூற்றவே வந்தோர் தாமே தொழுதனர் - அன்பரானார்.

என்ன புண்ணியம் செய்தனர் இவரிடம் கற்கும் இளஞ்சிறார்! ஒரு நாள் இச்சிறுவர்களைச் சோதிக்க நேர்ந்தது. என்னே இவர்தம் கல்வியின் தெளிவும் தேர்ச்சி பும்! மாணவர் மாற்றம் காட்டும் மருவிய ஆசான் மாட்சி. அடிகள் வெகுளாது விரையாது ஐயந் தீர அறிவுக் கேற்ப உள்ளத் துான்ற உரைத்து உரைத்துப் பால் மணம் மாறாப் பாலர் தமையும் பாவலராக்கினர். இந்நல்லாசிரியர் சொல் நல்லுரை கேட்கின் புல்லும் புகலும் இலக்கணம்; கல்லும் சொல்லும் கவி. இப்பேராசிரியர்பாற் கற்றபின் மற்றொருவர் வாய்க் கேட்க நூலுளதோ? மன முளதோ?

நாட்டின் நலத்தால் நல்லோர் தோன்றுவர். அடிகளின் நாடெது? அதன் நலம் யாது? அவர் நாடு நடுநாடு என்ப 'நடு நாடு' என்பது ஏனைய நாட்டின் இடையுள நாடு என்பர். நடு என்னும் சொல் ஈண்டு வினைத்தொகை2 சைவத்தையும் தமிழையும் நட்ட (நிலை நாட்டிய) நாடு; அடிகள் இவற்றை இன்று நடுகின்ற நாடு; இனி நடும் நாடுமாம். அன்பு நெறியிற் சென்றார் இருவர் (அப்பர், சுந்தரர்) இங்குத் தோன்றினர். அறிவு நெறியிற் சென்றார் இருவர் (மெய் கண்டார், அருணந்தி சிவாசாரியார்)இங்கு உதித்தனர். அந்நால்வரும் ஒருவராகி, ஞானியார் பெயரே

மெய் கண்டார்’ என்னும் பெயரில் உள்ள மெய்’ என்ப்து மெய்ஞ்ஞான’ என்பதில் உள்ளது. அருணந்தி சிவாசாரியார்’ என்னும் பெயரில் உள்ள சிவாசாரி யார்’ என்பது, அடிகளாரின் சிவாசாரியார்’ என்னும் பெயரிலும் உள்ளது.

பூண்டு நலந்தர இங்குத் தோன்றியுள்ளார். அந்நால் வரிற் பின்னுள் இருவர் அடிகள் பெயரினும் புகுந்தனர்.