பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அடிகள் பெயரினைச் சிறிது கருதுவீர்களாக. - மெய்ஞ் ஞான சிவாசாரியார்’. அடிகளுக்கும் அன்பு நெறியினும் அறிவு நெறியில் அவா அதிகம் போலும்.

அன்று ஒர் அம்மை (திலக வதியார்) கெடிலக்கரை யில் அழுது அழுது தந்தார் நம் ஆளுடை அரசை, இன்று அவ்வாற்றின் எதிர்கரை நின்று நம் தமிழ் அன்னையும் தவம் பல செய்து தந்தனள் ஒரு தனி இளங்குழவியை. இது தவ வேடம் பூண்டு தனியரசு செய்யக்காண்மின்.

ஐயன்மீர், எளியேன் கூறியன புனைந்துரை எனச் சிறிதும் ஐயுறற்க. ஐயம் உளதெனில் நேரிற் செல்க. உண்மையை உணர்க. அடிகளின் பொன் விழா அண் மைத்து. அடிகளைக் காணுதல் அரிதன்று. காணுதற்கு உரிய காலம் இடம் ஆதிய வரையறையில. யாவராயினும் கற்போர் உளரேல் அடிகள் கண் துயிலும் கொள்ளார். அவருடன் பல நாள் பழகுதல் வேண்டா. அடிகளை ஒரு காற் காணின், ஒருகால் அவர் உரை கேட்பின், *[1]'அன்ப ராகுந ரன்றிமன்பதை உலகில் மற்றையர் இலரே.

இது கோதண்டபாணி பிள்ளையின் 'கட்டுரை. பிள்ளை தமிழ் இலக்கிய இலக்கண அறிவு மிக்கவர் என்பது இக் கட்டுரையால் புலனாகிறது. அவரது உரை மிகவும் ஏற்கத் தக்கது.

ஆனந்த விகடன் -

'ஆனந்த விகடன் இதழில் எழுதி வந்த கல்கி, ரா. கிருஷ்ண மூர்த்தி, பின்னர் 'கல்கி’ என்னும் பெயரு டைய இதழின் ஆசிரியரானார். அதற்கு முன் அவர், ஞானியார் அடிகளாரின் ப்ொன் விழாக் கண்டு ஆனந்த விகடன் இதழில் எழுதிய கட்டுரையின் சுருக்கம் வருமாறு:


  1. நால்வர் நான்மணி மாலை - 4-13