பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81



சைவ சித்தாந்தமும் ஞானியார் சுவாமிகளும்

"........ இப்படி விதி விலக்காயுள்ள சமயப் பெரியார் களுக்குச் சிறந்த உதாரணமாக இன்று தமிழ் நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ ஞானியார் சுவாமிகளைத்தான் குறிப்பிடவேண்டும்..

சுவாமிகளின் உருவத் தோற்றத்தைப் பார்த்ததுமே, 'இதோ ஒரு பெரியார் இருக்கிறார்' என்னும் உணர்ச்சி 'நமக்கு உண்டாகும், அவருடைய வாய்மொழிகளைக் கேட்டு, அவருடைய வாழ்க்கை முறையையும் கவனித்தோ மானால், அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். 'அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா' என்று எண்ணி எண்ணி வியப்போம், ........ சைவ சமயத்தின் தத்துவ ஆராய்ச்சியில் கரை கண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் அச்சமய போதனையை அனுஷ்டிப்ப தில்லை. சைவ வாழ்க்கை முறையைக் கைப்பற்றிப் பருகும் பக்தர்களுக்கும் சைவ சமய தத்துவங்கள் தெரிந்திருப்ப தில்லை. - தத்துவமும் தெரிந்து வாழ்க்கையிலும் சைவர்க ளாயிருப்பவர்களுக்கு, அந்த உண்மைகளைச் சகலரும் அறிந்து கொள்ளும்படி பாக் எடுத்துச் சொல்வதற்கு வேண்டிய வாக்கு வன்மை இருப்பதில்லை. இந்த மூன்று விதமான பெருமைகளையும் உடையவர் ஸ்ரீ ஞானியார் சுவாமிகள். அவர் சமயத்தின் தத்துவங்களை நன்கு அறிந்தவர்; வாழ்க்கையில் அச்சமய போதனைக் கிணங்கி நடப்பவர், சைவசமயத்தின் தத்துவங்களையும் போதனை களையும் பற்றி அபார வாக்குவன்மையுடன் பிரசங்கம் செய்யக் கூடியவர்.

'சோனா மாரியாகப் பொழிவ'ர்'--'கடல் மடை திறந் தாற்போல் பேசுவார்' என்பதெல்லாம் சுவாமிகள் விஷ யத்தில் உபசார மொழிகள் அல்ல, ஐந்து வருஷத்