பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


இது ச. நடராசனின் கட்டுரைச் சுருக்கம், இன்னும் பொன் விழாத் தொடர்பாகப் பல இதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. பாராட்டுப் பாடல்களும் பல வந்துள் ளன. அவற்றையெல்லாம் விரிப்பிற் பெருகும்.



13. இறுதி-முப்பெரு மலையூர்ப்
பொழிவுகள்

1941 நவம்பர் - கார்த்திகைத் திங்களில் திருவண்ணா மலையில் விளக்கு (தீப)விழா தொடங்கியது. அவ்வூர் ந.சி. முனிசாமி முதலியார் அடிகளாரை அவ்வூருக்கு எழுந்தருளச் செய்து சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய் தார். முற்பகல்களில் அடிகளார் தங்கியிருந்த கட்டடத் தில் அன்பர்களின் கூட்டம் நிறைந்திருக்கும். அடிகளாரின் உரையாடல்களே சொற்பொழிவுகள்போல் சிறந்திருக்கும் மாலைக் காலத்தில் சத்திவிலாச சபையில் அடிகளாரின் தலைமை உரையும் அறிஞர் பலரின் சொற்பொழிவுகளும் சபையைச் சிறப்பிக்கும்.

திருவண்ணாமலை நகரில் வழக்கறிஞர் நாராயண சாமி முதலியார், ஆசிரியர் பெருமாள் முதலியார் ஆகி யோரின் வேண்டுகோளை மதித்து நகராட்சி உயர் நிலைப் பள்ளிக்குப் போந்து சொற்பொழிவாற்றித் தமிழ்ச் சங்கம் ஒன்றையும் அடிகளார் தம் கையால் தொடங்கி வைத் தார். அன்று தமிழ்மொழியின் சிறப்பு விரிவாக விளக்கப் பெற்றது.

அண்ணாமலையை அடுத்து, திருச்சிராப்பள்ளி மலையை அடையும் வாய்ப்பு ஏற்பட்டது. சென்னையைத் தலைமை